போட்டித் தேர்வுகளுக்கான கணித பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 6, 2020

போட்டித் தேர்வுகளுக்கான கணித பயிற்சிப் பட்டறை


வல்லம், மார்ச் 6 கணிதம்  பல யுகங்களாக வாழ்கிறது யூலர், கேச்சி ஹில்பர்ட், ஆவல் போன்ற பெருமக்களின் பங்களிப்பு பல நூற்றாண்டுகளை கடந்து இன்றளவும் வாழ் கிறது இன்றைய காலக்கட்டத்தில் போட்டித் தேர்வுகளில் கணிதம் என்பது சவாலான ஒன்றாக உள்ளது. இப்பயிற்சிப்பட்டறை போட்டித்தேர்வுகளில் கணிதத்தில் வெற்றி பெறுவதை அடிப்படையாக கொண்டுள்ளது.


வல்லம். 25.2.2020 அன்று தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன டாக்கின்ஸ் அரங்கில் கணிதத் துறைத்தலைவர் முனைவர் அ.சசிகலா அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தி தொடங்கி வைத்தார். மாண்பமை இணை துணைவேந்தர் அவர்கள் தனது தலைமை உரையில் போட்டித்தேர்வுகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார். கலை மற்றும் மேலாண்மை புலம் முதன்மையர் முனைவர் அ.ஜார்ஜ் அவர்கள் சிறப்பு விருந்தினர்களான மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியின் கணிதவியல், உதவிப்பேராசிரியர் முனைவர் முகம்மது ஹரீப் மற்றும் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் கனிதவியல் உத விபேராசிரியர் முனைவர் டி.தாமோதரன் அவர்களுக்கும் சிறப்பு செய்து கவுரவப் படுத்தினார்.


இறுதியில் இணைபுலத்தலைவர் முனைவர் பொ.ஜெயலெட்சுமி, இணைமுதன்மையர், கலை அறிவியல் மற்றும் மேலாண்மையில் புலம் தனது நன்றியுரையை நிகழ்த்தினார். தொடர்ந்து முகம்மது ஹாரிப் நேரியல் இயற் கணிதம் என்ற தலைப்பில் ஈஜென் திசையெண்கள் குறிப்பிட்டும் அடுத்த அமர் வில் முனைவர் டி.தாமோதரன் பொறியியல் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் கால்குலஸ் மற்றும் அதன் நுணுக்கங்களும் அறிவியல் தொழில் நுணுக் கங்களும் என்ற தலைப்பிலும் தங்களது உரையை நிகழ்த்தினார்.


26 பிப்.அன்று இரண்டாம் நாள் முதல் அமர்வு முகம்மது ஹாப் வகைக்கெடு மாறுப்பட்ட சமன்பாடுகள் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றியும் அடுத்த அமர்வானது முனைவர் டி.தாமோதரின் சிக்கலான ஆய்வுகள் என்ற தலைப்பிலும் நிகழ்ந்தது.


இடைவேளைக்கு பின் அடிப்படை புள்ளியியல் மற்றும் முந்தையை ஆண்டு வினாத் தாளின் தீர்வுகளை  கணிதத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர்  பேராசிரியர் இரா.ஆறுமுகம் அவர்களால் செய்து விவரிக்கப் பட்டது.


இதனைத் தொடர்ந்து 27 பிப்ரவரி அன்று இறுதிநாள் அமர்வில் முனைவர்கள் முகம்மது ஹாரீப் மற்றும் திசையன் இயற்கணிதம் என்ற தலைப்பிலும் சமன்பாடுகள் என்ற தலைப்பில் முனைவர் டி.தாமோதரனும் விவாதித்தனர்.


இறுதியாக வாழ்த்துரை அமர்வு மேரிகியூரி அரங்கில் நிகழ்ந்தது இதில் முதுகலை மாணவி மெர்லின் பிரின்சி அனைவரையும் வரவேற்றார். மாண்பமை  துணைவேந்தர் தனது வாழ்த் துரையில் மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார்.


பேராசிரியர் முனைவர் அ.ஜார்ஜ் முதன்மையர், கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் புலம் பங்களித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர். இறுதியில் முனைவர் இரா.ஆறுமுகம் நன்றி தெரிவித்தார்.


No comments:

Post a Comment