திருவனந்தபுரம், ஜன. 1- இரவு நேரங்களில் பெண்கள் வெளியே சென்று விட்டு திரும்புவது பெரும் சவாலாக இருக்கிறது. இரவு நேரங் களில் வெளியே சென்றுவிட்டு திரும்பிய நிர்பயா, அய்தராபாத் பெண் மருத்துவரின் படுகொலை கள் இந்தியாவையே உலுக்கியெடுத் தது.
இரவில் பெண்கள் வெளியே சென்றுவிட்டு திரும்புவது கேள் விக்குறியான நிலையில், கேரள அரசு 'இரவு நடை' என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள் ளது. நிர்பயா 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா இத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.
இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இந்த இரவு நடையில் பெண்கள் பங்கேற்றனர். குழந் தைகளும் இந்த 'இரவுநடை'யில் பங்கேற்றனர். கேரளாவில் 22 இடங்களில் இந்த நடை புரட்சி நடந்தாலும், திருவனந்தபுரத்தில் அதிக அளவில் பெண்கள் பங் கேற்றனர்.
இது குறித்து அமைச்சர் கே. கே.சைலஜா, ''பெண்கள் அச்ச மின்றி இரவில் நடமாடும் நிலை வரவேண்டும். அதற்காகத்தான் இத்திட்டத்தை கொண்டு வந்துள் ளோம். 'இரவுநடை'யில் பங்கேற் கும் பெண்களை காவல்துறையி னரும், தன்னார்வ அமைப்பினரும் தூரத்தில் இருந்து கவனிப்பார்கள். பெண்களுக்கு தொந்தரவு தரும் ஆண்களை பிடித்து உடனுக்குடன் அவர்கள்மீது நடவடிக்கை எடுக் கப்படும். ஒவ்வொரு வாரமும் இந்த இரவு நடை மாநிலம் முழு வதிலும் நடைபெறும். இதன் மூல மாக பெண்களுக்கு இரவு பொது இடங்களுக்கு செல்லலாம் என்ற நம்பிக்கை வளரும்'' என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment