மாநில அரசின்கீழ் இயங்கும் பொது சுகாதாரம்,
பொது மருத்துவமனைகளை அபகரிக்க மத்திய அரசு திட்டம்
தமிழர் தலைவர் எச்சரிக்கை
பெரம்பலூர், ஜன.26 ‘நீட்’ தேர்வு போன்ற பேராபத்தை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்து ஒழிக்கவேண்டும், மாநில அரசின்கீழ் இயங்கும் பொது சுகாதாரம், பொது மருத்துவமனைகளை அபகரிக்க மத்திய அரசு முயற்சிக் கிறது என தமிழர் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பெரும் பயணத்தை கடந்த 20ஆம் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து தொடங்கி தமிழகம் முழுவதும் பரப்புரை செய்து வருகிறார்.
நேற்று (25.1.2020) பெரம்பலூரில் நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பயணத்தின்போது செய்தியாளர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சந்தித்தபோது கூறியதாவது:
மாநில அரசுகளின் அதிகாரங்களில் உரிமை என்ற பெயராலே, மத்திய அரசு ஒட்டகம் நுழைவதைப்போல உள்ளே நுழைகிறது. இந்த ஆபத்தைப்புரிந்து கொள்ள வேண்டும். பொது சுகாதாரம், அதேபோல மருத்துவ மனைகள் போன்று தமிழ்நாட்டிலே மாநில அரசுகளின்கீழே இருக்கிற அத்தனையையும் மத்திய அரசு ஆதிக்கம் செலுத் தக்கூடிய அளவிற்குப் ஆக வேண்டும் என்று முனை கிறார்கள். அதனுடைய பாரதூர விளைவுகள் பெரிய அள விற்கு தமிழகத்தை பாதிக்கச் செய்கிறது. இங்கே இருக்கிற டாக்டர்களுக்கு வேலை கிடைக்காமல், அவர்கள் வடக்கே இருந்து வரக்கூடிய ஆபத்தும் ஏற்படக்கூடும். இதை ஆளுங்கட்சி கடுமையாக எதிர்க்க வேண்டும். எதிர்க் கட்சியும் நிச்சயமாக இதில் பேதமில்லாமல் நிற்கவேண்டும். பொதுப் பட்டியலுக்குக் கல்வி போனதன் விளைவுதான், பறிக்கப்பட்டதன் விளைவுதான் மாநில பட்டியலிலிருந்து ‘நீட்’ போன்ற கொடுமைகள். அதே கொடுமைகள் மீண்டும் இன்னும் தீவிரமாக்கப்படு வதற்குத் தான், பொது சுகாதாரத்தையும், மருத்துவமனை களையும் எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்று சொல்லக்கூடியதான இந்த புதிய ஆபத்தை எதிர்த்து, ஒழிப்பதற்கு எல்லா அரசியல் கட்சிகளும், மாநில உரிமைகளில் நம்பிக்கை உள்ளவர்களும் முன் வர வேண்டும். அதுதான் இப்போது மிக அவசியமும், அவசர மும் ஆகும்.
இவ்வாறு தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
'நீட்' எதிர்ப்பு பெரும் பயணத்தில்
தமிழர் தலைவருக்கு பேராதரவு
தமிழகத்தில் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு மாண வர் சேர்க்கை முறையாக நடைபெற்று வந்த நிலையில், ‘நீட்’ நுழைவுத் தேர்வு மத்திய அரசால் திணிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்துக்கட்சியினர், மாணவர்கள், பொது மக்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ள நிலையில் நீட் தேர்வு திணிப்பு கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மருத்துவக்கல்வியில் ‘நீட்’ நுழைவுத்தேர்வு திணிக்கப் பட்டுள்ளதன்மூலம் தமிழக மாணவர்களின் கனவு மத்திய பாஜக அரசால் தகர்க்கப்பட்டு, மாணவச் செல்வங்கள் பலர் உயிரிழந்தனர். தமிழக மாநில கல்வி உரிமை மத்திய அரசால் பறிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், தமிழகத்துக்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்காமல் மத்திய அரசு தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைக்கப்பட்டு வருகிறது. அனைத்துக்கட்சியினரும் ஒன்றிணைந்து தொடர் போராட் டங்கள் நடத்திவந்த நிலையில், பிடிவாதமாக மத்திய அரசு ‘நீட்’ தேர்வை திணித்து வருகிறது. எவ்வித திசை திருப்பல்களுக்கும் இடம் அளிக்காமல், தமிழக மாணவர் கல்வி உரிமைகள், மாநில உரிமைகள் மீட்புக்காக தொடர்ச்சி யாக திராவிடர்கழகம், தமிழர் தலைவர் ஆசிரியர் இடை யறாது குரல் கொடுத்து, போராடி வருவதைக் காணும் பொதுமக்கள் கட்சி பேதமின்றி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பணியைப் போற்றி பாராட்டி, பேராதரவினை அளித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment