வேலைபார்த்த மருத்துவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 28, 2019

வேலைபார்த்த மருத்துவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்


கேரளாவைச்சேர்ந்த அஜித் சிறீதரன் எலும்பியல் பிரிவு மருத்துவராக கத்தார் நாட்டில் பணியாற்றி வருகிறார். இவர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் மக்களை இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக போராடுபவர்கள். மோசமான இஸ்லாமியர்களுக்காக போராடுகிறவர்கள் என்று கூறி இஸ்லாமியர்களை மோசமாக சித்தரித்து பதிவிட்டிருந்தார். இதனால் அவர் கத்தார் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்


தோஹா நஸீம் அல் ரஃபீக் மெடிக்கல் சென்டர் ஆர்த்தோ பிரிவில் சிறப்பு மருத் துவராக பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த டாக்டர் அஜித் சிறீதரன்.. தொடர்ந்து தனது முகநூல் பக்கத்தில் முஸ்லிம் விரோத கருத்துக்களை பதிவு செய்து வந்தது மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததும் விளக்கம் கேட்கப்பட்டது.


இந்த நிலையில் இவர் எனது நண்பர் களுடன் சாட்டில் உரையாடிக் கொண்டு இருந்தேன், அப்போது எனது நண்பர்கள் சில வார்த்தைகளை எழுதினார்கள். அதை நான் தவறுதலாக எனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு விட்டேன், ஆகவே நிர்வாகம் என்னை மன்னிக்கவேண்டும். நான் இது போன்ற தவறுகளை செய்யமாட் டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதியிருந் தார். மேலும் நான் ஆயிரக்கணக்கான இஸ் லாமியர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்துள்ளேன், ஆகவே என்னை மன்னித்து மீண்டும் என்னை பணியில் சேர்த்துக்கொள்ளுமாறும், நான் மீண்டும் பணிசெய்ய கடமைப்பட்டுள்ளேன் என்று மன்னிப்பு கடிதத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனை முன்பு மலையா ளிகள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினார் கள்.


இந்த நிலையில் மருத்துவமனை நிர் வாகம் அவரை பணியிலிருந்து நீக்கி விமா னத்திற்கான தொகையைக் கொடுத்து அனுப்பி  வைத்துவிட்டது, 13 ஆண்டுகளாக கத்தாரில் குடும்பத்துடன் பணியாற்றிய மருத்துவர் மதவெறியினால் தனது வேலையை இழந்து நல்ல வருவாயை இழந்து ஊர் திரும்பியுள்ளார்.


No comments:

Post a Comment