சிங்கப்பூரிலிருந்து குடும்பத்தோடு விரட்டப்பட்டவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 28, 2019

சிங்கப்பூரிலிருந்து குடும்பத்தோடு விரட்டப்பட்டவர்


இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் தாஸ் பட்நாயக் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக் கும் மேலாக சிங்கப்பூரில் உள்ள டிபிஎஸ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.   சிங்கப்பூ ரில் பணி புரியும் இந்தியர்களுக்கான ஃபேஸ்புக் குழுவில், ஒரு படத்தை பகிர்ந் துள்ளார்


அதில், சிங்கப்பூரின் தேசியக் கொடி அச்சிடப்பட்ட ஒரு டி -சர்ட்டில், அந்தக் கொடி கிழிக்கப்பட்டு, அதனுள் இந்திய தேசியக் கொடி தெரிவது போன்ற படமும், இன்னும் எனது இதயம் இந்தியனாகவே உள்ளது'' என்ற வாசகமும் இருந்தது. சிங்கப்பூர் தேசியக் கொடி கிழிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், அந்தப் படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 11 ஆயிரம் பேர் கொண்ட அந்த ஃபேஸ்புக் குழுவில், பலரும் அபிஜித் செய்த இந்தச் செயலை எதிர்த்ததால், அப்போதே அந்த படத்தை அவர் நீக்கிவிட்டார்.


இருப்பினும், இந்த சம்பவம் குறித்து டிபிஎஸ் வங்கிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக அந்த வங்கி,  மன தளவில் நான் இந்தியனாகவே இருக்கிறேன் என்று வெளிப்படுத்த விரும்பியுள்ளார்'' என்று கூறியது. அதன்பிறகு அந்த வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில், அந்த நபர் பணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக வும், அந்த வங்கி இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்க விரும்பாது எனவும் தெரிவித்தது. அந்நாட்டு சட்டப்படி, சிங்கப்பூர் குடி மகனாக இருந்து தேசியக் கொடியை அவ மானம் செய்யும் நபருக்கு அதிகபட்சமாக ஆயிரம் சிங்கப்பூர் டாலர் கள் அபராதமாக விதிக்கப்படும். அதே வேளையில் அவர் அயல்நாட்டிலிருந்து பணிநிமித்தம் அங்கு சிங்கப்பூருக்கு வந்த நபராக இருக்கும் பட்சத்தில், அவரது விசா ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார். மேலும் அவர் மீண்டும் அந்த நாட்டிற்குள் நுழையமுடியாது.


No comments:

Post a Comment