கோயபல்ஸ் மீண்டும் பிறந்துள்ளாரா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 28, 2019

கோயபல்ஸ் மீண்டும் பிறந்துள்ளாரா


"எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத்தொடங்கி விடுவார்கள். அரசியல், பொருளாதார, மற்றும் அல்லது ராணுவ விளைவுகளை மக்களிடமிருந்து அரசாங்கம் மறைப்பதன் மூலம், பொய்யை குறிப்பிட்ட காலம் வரை காப்பாற்றலாம். உண்மைதான் பொய்க்கு எதிரி, அதே போல, உண்மைதான் அரசாங்கத்தின் மிகப்பெரிய எதிரி என்பதால், அதிருப்தியை அடக்க எல்லா அதிகாரங் களையும் பிரயோகிப்பது அரசாங்கத்திற்கு மிகவும் அவசியமாகிறது."


”ஜோசப் கோயபல்ஸ்”


தேசிய குடியுரிமை கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடக்கப் போவதில்லை. எதிர்கட்சிகள் கூறுவதைப் போல் இந்தியாவில் எங்குமே தடுப்பு மய்யங்கள் இல்லை என்று மோடி டில்லியில் ராம்லீலா திடலில் நடந்த கூட்டத்தில் பேசினார்.


மோடி குடியுரிமை தடுப்புச்சட்ட திருத்த மசோதா விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் இல்லை. வாக் கெடுப்பின் போதும் இல்லை. இவ்வளவும் முக்கிய விவாதத் தின் போது மோடி வெளிநாடுகளுக்கும் செல்லவில்லை. ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்திற்கும் செல்லவில்லை. எந்த ஒரு அயல்நாட்டு தலைவர்களும் டில்லி வந்து அவரைச் சந்தித்துப் பேசும் அலுவலும் இல்லை. அப்படி என்றால் மோடி ஏன் நாடாளுமன்றத்திற்கு வந்து விவாதத் தில் கலந்துகொள்ளவில்லை. அப்படி கலந்துகொண்டு உறுப்பினர்களின் அய்யப்பட்டை தீர்த்துவைத்திருக்க லாமே? மோடி அப்படி செய்யவேமாட்டார். மோடி தான் பதவிக்கு வந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கி இன்றுவரை ஊடகங்களில் சுதந்திரமான கேள்விகளுக்கு பதில் கொடுக்கவில்லை. அப்படி அவர் கொடுத்த ஒன்று இரண்டு பேட்டிகளும் அவர் எழுதிக்கொடுத்த கேள்வியைத்தான் ஊடகவியலாளர்கள் கேட்டுள்ளனர். இதை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது,


மேலும் அவர் தொலைக்காட்சியில் கூட வராமல் முகத்தை மூடிகொண்டு 1935-களில் வானொலியில் தொடர்ந்து பேசிய இட்லர் போல் மோடியும் மன் கி பாத் என்று முகம் காட்டாமல் பேசிக்கொண்டு இருக்கிறார். காரணம் யாருமே கேள்வி கேட்ககூடாது என்பது ஒன்று மட்டுமே. ஆகையால் தான் பொதுமேடைகளில் பொய் களை அளவுக்கு மீறி தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்


நாடாளுமன்றத்தில் நடந்த தொடர் விவாதங்களே தடுப்பு மய்யங்கள் இருப்பதை உறுதிசெய்கின்றன. இதற்கு மோடியின் பதில் என்ன?


டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசிய  மோடி இந்தி யாவில் தடுப்பு மய்யமே கிடையாது என்றும் அவ்வாறு இருப்பதாக வதந்தி பரவுகிறது என்றும் கூறியுள்ளார்.


"காங்கிரஸ் மற்றும் அர்பன் நக்ஸல்களால் கிளப்பப்படும் தடுப்பு மய்யம் பற்றிய விஷயம் பொய். தவறான நோக்கம் கொண்டு கூறப்பட்ட ஒரு பொய். இப்படிக்கூட பொய் சொல்லலாமா என எனக்கு வியப்பாக இருக்கிறது," எனக் கூறினார்.


மேலும் அவர், "இந்தியாவில் பிறந்து வளர்ந்த முஸ்லிம் களுக்கு குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு  ஆகியவற்றால் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த நாட்டில் பிறந்த முஸ்லிம்களை எந்த முகாம்களுக்கும் அனுப்பவில்லை. இந்தியாவில் தடுப்பு முகாம்களே இல்லை. இது தவறான நோக்கத்தைக் கொண்டு பரப்பக் கூடிய பொய் ஆகும். மக்களின் மனதை அழுக்காக்கக்கூடிய பொய்," எனக் கூறியுள்ளார்.


ஆனால் சில ஆங்கில இதழ்கள் அசாமில் உள்ள தடுப்பு முகாம்களுக்குச் சென்று அவர்களின் வாழ்க்கையை படம்பிடித்துள்ளன. அவர்கள் குறிப்பிடுவதாவது, "தடுப்பு முகாம்களில் இருப்பவர்களுக்கும் இருந்தவர்களுக்கும் தடுப்பு முகாம்கள் என்பது ஒரு கெட்ட கனவைப் போன்றது. இதை மறக்க அவர்களுக்கு பல நாட்கள் ஆகும்" என்கிறார்கள்.


"குடியுரிமையை தீர்மானிக்கும் சட்ட விதிமுறைகள் முயற்சியில் அசாம் மாநிலத்திலிருக்கும் குழந்தைகளின் எதிர்காலம் இருட்டில் மூழ்கியுள்ளது. "


"இந்த குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள் தடுப்பு முகாம்களின் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்  சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சில நேரங்களில் யாருடைய துணையும் இல்லாமல் உலகத்தின் இன்னல் களை சந்திக்க நேரிடுகிறது. இவர்களை கண்டுகொள்ள இப்போதைக்கு யாரும் இல்லை,"  இந்திய நாடாளுமன்றத் தில் நடந்த கூட்டத்தில் கேட்கப்பட்ட பல கேள்விகள் மற்றும் பதில்களைப் பார்த்தோமானால், தடுப்பு முகாம் களை பற்றி விவாதம் நடந்தது தெரிய வருகிறது. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ள தாக நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.


ஜூலை... 10. 20.19இல் மாநிலங்களவையில் எழுப்பப் பட்ட கேள்வி ஒன்றுக்கு உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், "நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களின் குடியுரிமை குறித்த பிரச்சினை தீரும் வரையில் அல்லது அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் வரையில் அவர்களை தடுப்பு முகாம்களில் மாநிலங்கள் வைத்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுவரை இவ்வாறான தடுப்பு மய்யங்கள் எத்தனை இருக்கின்றன," என்பது தெரியவில்லை என பதிலளித்தார். ஜனவரி 9, 2019 அன்று, "மத்திய அரசால், அனைத்து மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தங்கள் பகுதியில் தடுப்பு மய்யங்கள் அமைக்க மாதிரி தடுப்பு மய்யங்கள் அல்லது தங்க வைப்பதற்கான மய்யங்களின் கையேடு கொடுக்கப்பட்டுள்ளது," எனவும் அவர் கூறியிருந்தார்.


ஜூலை 2, 2019இல் இதே பதிலை மக்களவையில் உள்துறையின் இன்னொரு இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார். மாநில அரசுகளுக்கு அனுப்பப் பட்டுள்ள கையேடுகளில் அந்த மய்யங்களில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் விளக்கப் பட்டுள்ளது எனவும் மத்திய இணை அமைச்சர்கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.


இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'தி ஹிந்து' பத்திரிக்கையில் வெளியான செய்தியின்படி 2019 ஜூலை 2 அன்று மக்களவையில் 2014 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் மாநில அரசுகளுக்கு தடுப்பு மய்யங்கள் அமைக்க அறி வுறுத்தப்பட்டுள்ளது என நித்தியானந்த் ராய் பேசியுள்ளார். 16 ஜூலை 2019 அன்று மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அசாமில் தடுப்பு மய்யங்கள் நிறுவப் பட்டுள்ளன என கிஷன் ரெட்டி கூறியுள்ளார். இந்த மய்யங் கள் வெளிநாட்டவர்கள் சட்டம் 1946, 3(2)(இ) பிரிவின்படி குடியுரிமை இல்லாதவர்களை வைத்திருப்பதற்காக உதவு கிறது எனவும் கூறியுள்ளார்


No comments:

Post a Comment