விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 11, 2024

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல்

சென்னை, ஜூன் 11 விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூன் 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் புகழேந்தி. திமுகவை சேர்ந்த இவர், மக்களவை தேர்தல் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறை வால் காலமானார். இதையடுத்து, விக்கிர வாண்டி சட்டமன்ற உறுப்பினர் மறைவு குறித்து தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் தெரிவித்தது. தொடர்ந்து, ஏப். 8-ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வழக்கமாக, ஒரு மக்களவை அல்லது சட்டப்பேரவை தொகுதி காலியானால், அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதற்கிடையில், நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றன. இறுதி கட்ட வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1-ஆம் தேதி நடைபெற்றது. இறுதிக் கட்ட தேர்தலின்போதே, விக்கிர வாண்டி இடைத்தேர்தலும் நடத்தப்பட லாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆலோ சனை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பு: இந் நிலையில், தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் 13 சட்டப் பேரவை தொகுதிகளின் தேர்தல் தொடர் பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று (10.6.2024) வெளியிட்டது.

அதன்படி, தேர்தல் தொடர்பான அறிவிக்கை வரும்ஜூன் 14-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு அன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 21-ஆம்தேதி. மனுக்கள் ஜூன் 24-ஆம் தேதி பரிசீலிக்கப்படும். போட்டியிட விரும்பாதவர்கள் மனுக்களை திரும்பப் பெற ஜூன் 26-ஆம் தேதி கடைசி நாள். அன்று மாலையேவேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியாகும்.

ஜூலை10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நடைமுறைகள் ஜூலை 15-ஆம் தேதி நிறைவு பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், நேற்று (10.6.2024) முதல் விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

திமுக போட்டி

மனுத் தாக்கலுக்கு குறைந்த காலமே இருக்கும் நிலையில் திமுக தலைமை விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவாவை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment