ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: 'நிட்டி ஆயோக்' பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 9, 2024

ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: 'நிட்டி ஆயோக்' பாராட்டு

featured image

சென்னை, மே 9– ஜவுளி துணிகள், ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள் ஏற்றுமதி யில், தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தி.மு.க., அரசு பொறுப்பேற்று, மூன்று ஆண் டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு துறைக ளில், தமிழ்நாடு இந்திய அள வில் முதலிடம் பெற்றுள்ளது.

உற்பத்தி பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்த, ஒன்றிய அரசின் நிட்டி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்து, 80 முதல் 100 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி செய்து, தமிழ்நாடு முதலிடம் பெற்றுள் ளதாக பாராட்டி உள்ளது.

இந்தியா முழுதும் நடந்த ஏற்றுமதியில், தமிழ்நாடு, 16.30 சதவீத பொருட்களை ஏற்று மதி செய்து, இரண்டாம் இடம் பெற்றுள்ளது.கர்ப்பிணிப் பெண்கள் சுகா தாரக் குறியீடுகளில், கர்ப் பிணிப் பெண்கள் பராமரிப் புடன், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில், தமிழ் நாடு முதலிடத்தில் உள்ளது.  தமிழ்நாட்டில், 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைக ளில் நடக்கின்றன. அனைத்து வசதிகளுடன் குழந்தைகளை பராமரித்து காப்பதில், தமிழ் நாடு முன்னணியில்உள்ளது. தமிழ்நாடு அதிக அளவில், 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தி, இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

ஜவுளி துணிகள் ஏற்றுமதி, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, தோல் பொருட்கள் ஏற்றுமதி ஆகியவற்றில், தமிழ்நாடு முத லிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டின் எலக்ட் ரானிக் பொருட்கள் ஏற்றுமதி 1.39 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில் எட்டு லட்சம்கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகள், தமிழ்நாடு பெரும் பாலான முக்கியத் துறைகளில், இந்தியாவில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்து கின்றன.

முதலீடு

முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில், சென்னை, கோவை, தூத்துக்குடி நகரங்க ளிலும், மலேஷியா, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு வழியாக, 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட் டுள்ளன. இதன் வழியாக, 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் நடந்துள்ளன.   முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதுவரை 27 தொழிற்சாலை கள் திறந்து வைக்கப்பட் டுள்ளன. இவற்றின் வழியே 74,757 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப் பட்டுள்ளன.

No comments:

Post a Comment