ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் பின்பற்ற வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 31, 2024

ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் பின்பற்ற வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வெளியீடு

featured image

சென்னை, ஜன.31 பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசா ணைகள்; பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற் றும் அனைத்து வகை ஆசிரியர் களிடையே பொது மாறுதல்கள் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது .
மேலும் பள்ளிக் கல்வி இயக் ககத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பிடும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வகுத்து அறிவுறுத்தல் வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் பணிநாடுநர் களில் இருந்து நேரடி பணி நியமனம் செய்யும்போது, பின்பற்றப்பட வேண்டிய கால அட்டவணையை கீழ்க்கண்டவாறு வெளியிட்டு அரசு ஆணையிடுகிறது.

அதன்படி, பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களை வருகிற மே 1-க்குள் கணக்கீடு செய்ய வேண்டும். அவர்களை தேவையுள்ள பள்ளி களுக்கு பணிநிரவல் செய்வது மே 31-க்குள் நடக்க வேண்டும், அனைத்து வகை ஆசிரியர் களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 30-க்குள் நடத்தி முடிக்க வேண்டும், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட மதிப் பீட்டை ஜூலை 1க்குள் முடிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துருக்கள் இருந்தால் அதனை அரசுக்கு ஜூலை 15-க்குள் அனுப்ப வேண்டும். அதன் மீது அரசாணை செப் டம்பர் 30-க்குள் வெளியிடப்பட வேண்டும்,
நேரடி பணி நியமனம் செய்யப் படும் உத்தேச பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய குழு மற்றும் நிதித் துறை உறுப்பினரின் ஒப்புதலை உறுதி செய்த பின் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30-க்குள் வெளியிடப்பட வேண்டும். சான் றிதழ் சரிபார்ப்பு மற்றும் இறுதி பட்டி யலை மே 1 முதல் 31-க்குள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment