ரயில் விபத்துகளை தடுக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 4, 2024

ரயில் விபத்துகளை தடுக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, ஜன.4 ரயில் விபத்துகளை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட பாது காப்பு நடவடிக்கைகள் குறித்து விளக் கம் அளிக்குமாறு ஒன்றிய அரசிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ரயில்வே விபத்துகளை தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கை களை அமல்படுத்த அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு, விசார ணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலிடம் நீதிபதிகள் கூறியதாவது:

ரயில் விபத்துகளை தடுக்க செயல் படுத்தப்படும் அல்லது செயல்படுத்த முன்மொழியப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நான்கு வாரங்களுக்குப் பிறகான அடுத்த கட்ட விசாரணையின்போது ஒன் றிய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நாடு தழுவிய அளவில் ரயில் மோதலை தவிர்க்க கவாச் முறைஅறிமுகப்படுத்தப்பட்டால் எவ்வளவு செலவாகும் என்பதையும், இது தொடர்பாக ஏதேனும் சோத னைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும் ஒன்றிய அரசு விளக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒடிசா ரயில் விபத்தில் 293 பேர் பலியாகினர். 1,000-க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர்.ரயில்வே வரலாற்றில் மிக மோசமானதாக கருதப்படும் இந்த விபத்து நடை பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு ரயில்வேயில் உள்ள தானியங்கி பாது காப்பு அமைப்பான கவாச் உள் ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஒன்றிய அரசிடம் தற்போது உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது.

No comments:

Post a Comment