மதுக்கூர்,ஜன.31- பட்டுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் மறைந்த புலவஞ்சி இரெ.. இராமையன் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் 29.1.2024 அன்று மாலை 6 மணி அளவில் மதுக்கூர் பேருந்து நிலையத்தில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஆ.இரத்தின சபாபதி தலைமையில் நடை பெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் புலவஞ்சி வழக் குரைஞர் இரா..காமராஜ், பட்டுக் கோட்டை ஒன்றிய கழக செய லாளர் ஏனாதி சி..ரெங்கசாமி, மதுக்கூர் ஒன்றிய மேனாள் செய லாளர் த.இராஜ்குமார், மதுக்கூர் நகர கழக பொறுப்பாளர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பட்டுக்கோட்டை நகர கழக தலைவர் பொறியாளர் சிற்பி வை. சேகர் வரவேற்புரையுடன் தெரு முனை கூட்டம் நடைபெற்றது.
கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் சிறப்புரையில், புலவஞ்சி இரெ.. இராமையனின் கழக செயல்பாடுகள் குறித்தும் நீட் தேர்வு குறித்த தெளிவான விளக்கத் தினையும், வருகின்ற நாடாளு மன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க கூடாது என்பதற்கான தெள்ளத் தெளிவான விளக்கத் தையும், பகுத்தறிவு பிரச்சாரத் தையும் மய்யப்படுத்தி உரையாற் றினார்.
கூட்டத் தொடக்கத்தில் மந் திரம் அல்ல, தந்திரமே! என்கின்ற பகுத்தறிவு செயல்விளக்க நிகழ்ச் சியை மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன் நடத்தினார். இந்நிகழ்வு மக்களை சிந்திக்கவும் அறிவை தூண்டும் விதத்திலும் அமைந்தது.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீல கண்டன், மாவட்ட துணைத் தலைவர் சொக்கனாவூர் கு.சிவாஜி, மதுக்கூர் ஒன்றிய துணைத் தலை வர் மண்டலகோட்டை சரவணன், ஒன்றிய அமைப்பாளர் நா.வை.இராதாகிருஷ்ணன், மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மன்னங்காடு சிவ ஞானம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தொ. சமரன், பேரா வூரணி நகர செயலாளர் சி.சந்திர மோகன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய இளைஞரணி தலைவர் சு.வசி, உ.வீரமணி மற்றும் ஏராள மானவர் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.
கூட்டத்தையொட்டி கழக கொடிகள் கட்டப்பட்டிருந்தன. தந்தை பெரியார் தமிழர் தலைவர் ஆசிரியர் புலவஞ்சி இராமையன் ஆகியோரின் உருவம் தாங்கிய பதாகை வைக்கப்பட்டிருந்தது.
கூட்ட முடிவில் மதுக்கூர் ஒன்றிய தலைவர் பெ.அண்ணா துரை நன்றி கூறினார்.
No comments:
Post a Comment