'விடுதலை' சந்தா சேர்ப்பு-தந்தை பெரியார் நினைவுநாள் கருத்தரங்கங்கள்! மயிலாடுதுறை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

'விடுதலை' சந்தா சேர்ப்பு-தந்தை பெரியார் நினைவுநாள் கருத்தரங்கங்கள்! மயிலாடுதுறை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்!

மயிலாடுதுறை, டிச. 2- மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 29.11.2023 புதன்கிழமை காலை 11 மணியளவில் மாநில அமைப் பாளர் க.குருசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கடவாசல் குணசேக ரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கி. தள பதிராஜ் அனைவரையும் வர வேற்று கலந்துரையாடல் கூட் டத்தின் நோக்கத்தினை எடுத் துரைத்தார். 

மாநில அமைப்பாளர் க.குருசாமி, மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், மாவட்ட அமைப்பாளர் ஞான வள்ளுவன், மாவட்ட துணைச் செயலாளர் அரங்க நாகரத்தி னம், மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. நகர செயலாளர் பூ.சி.காமராஜ் நன்றி கூறினார்.

மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆவது பிறந்தநாள் சமூக நீதி நாளை முன்னிட்டு மயிலாடு துறை மாவட்டத்தில் விடுதலை சந்தாக்களை கடந்த ஆண்டு விட அதிகமாக சேர்ப்பது என முடிவெடுக்கப்பட்டது 

3. டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் கழக பேச்சாளர்களை அழைத்து கருத்தரங்கத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 

மாவட்ட கழக கலந்துரை யாடல் கூட்டத்தில்  குத்தாலம் ஒன்றிய தலைவர் கொக்கூர் முருகையன், ஒன்றிய செய லாளர் கு.இளமாறன், ஒன்றிய துணைச் செயலாளர் தி.சபா பதி, மயிலாடுதுறை நகர தலை வர் சீனி.முத்து, ஒன்றிய தலை வர் டிவி இளங்கோவன், கொள் ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரங்கன், மயிலாடு துறை பகுத்தறிவாளர் கழக  தோழர்கள் தங்க.செல்வராஜ், மதிவாணன், பொய்யாக்குடி எஸ்.சம்பந்தம், கோமல் டி.எஸ்.மணிமாறன், கும்பகோணம் ஏ.பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment