வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கண்காணிக்க 10 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கண்காணிக்க 10 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை, அக். 31- தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27ஆம் தேதி வெளியிடப் பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தற்போது 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கின. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை கண்காணிப்பதற்காக மாவட்ட அளவில் 10 அய்.ஏ.எஸ். அதிகாரி கள், பார்வையாளர்களாக நியமிக் கப்பட்டுள்ளனர்.

அதன்படி, சென்னை, திருவள் ளூர், செங்கல்பட்டு மாவட்டங் களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையர் மைதிலி ராஜேந்திரன்; காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திரு வண்ணாமலை ஆகிய மாவட்டங் களுக்கு சிறு தொழில்கள் கழக மேலாண்மை இயக்குநர் மதுமதி; விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கட லூர் மாவட்டங்களுக்கு ஜவுளிகள் ஆணையர் வள்ளலார்; கிருஷ்ண கிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங் களுக்கு தமிழ்நாடு மீன்வளத்துறை ஆணையர் பழனிசாமி; அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்ப லூர் மாவட்டங்களுக்கு நில சீர் திருத்த ஆணையர் வெங்கடாசலம்; தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயி லாடுதுறை மாவட்டங்களுக்கு வேளாண்மை ஆணையர் சுப்பிர ணியன்; கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலேண்மை இயக்குநர் சங்கர்; திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங் களுக்கு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவ ராவ்; மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையர் சுந்தரவல்லி; தூத்துக் குடி, நெல்லை, தென்காசி, கன்னி யாகுமரி மாவட்டங்களுக்கு தமிழ் நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் சரவணவேல்ராஜ் ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப் புப் பணி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேரையும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று (30.10.2023) அழைத்து ஆலோ சனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை தலை மைச் செயலகத்தில் 1லு மணி நேரம் நடைபெற்றது. வாக்காளர் பட்டி யல் திருத்தப்பணியில் ஈடுபட் டுள்ள பணியாளர்களை அழைத்து ஆய்வு செய்வது, அதற்கு தேவை யான அறிவுரைகளை வழங்குவது, இதற்காக சம்பந்தப்பட்ட மாவட் டங்களுக்கு 3 முறை பயணிப்பது ஆகியவற்றுக்கான ஆலோசனை களை சத்யபிரதா சாகு வழங்கினார்.

No comments:

Post a Comment