திருவாரூர் மாவட்ட இளைஞரணி சார்பாக தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்தநாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 12, 2023

திருவாரூர் மாவட்ட இளைஞரணி சார்பாக தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்தநாள்

திருவாரூர், செப். 12 - திருவாரூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் 10.09.2023 மாலை 6:30 மணியளவில்  நடைபெற்றது.

நிகழ்விற்கு திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி தலை வர் கே.பிளாட்டோ. தலைமை வகித்தார். மாவட்ட இளைஞ ரணி செயலாளர் மு.மதன் அனைவரையும் வரவேற்றார்.

மாநில இளைஞரணி துணை செயலாளர்  நாத்திக.பொன் முடி, தொடக்க உரையாற்றினார்.

மாநில இளைஞரணி செய லாளர்  த.சீ.இளந்திரையன். சிறப்புரையாற்றினார்.

மாவட்டத் தலைவர் வீ.மோகன், தலைமை கழக அமைப்பாளர்  சு.கிருஷ்ண மூர்த்தி, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் க.வீரையன், மாவட்ட பகுத் தறிவு ஆசிரியரணி  தலைவர் கே.செந்தமிழ்செல்வி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் நகர இளைஞரணி துணை தலைவர் சி.தமிழவன், இளைஞரணி பொறுப்பாளர் அ.ஜெ. உமாநாத் இளைஞரணி துணை செயலாளர், அ.செல் வக்குமார், நன்னிலம் ஒன்றிய செயலாளர்  சு.ஆறுமுகம், குடவாசல் ஒன்றிய தலைவர் க.அசோக்ராஜ், குடவாசல் ஒன்றிய துணை செயலாளர் பி.செல்வம், இளம் பேச்சாளர் நர்மதா. ஆகிய கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளை ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுதல் படி  செடி, கொடி, படி கிளைக் கழ கங்கள் வாரியாக மரக்கன்றுகள் நட்டு கழகக் கொடி ஏற்றி வெகு விமர்சையாக கொண் டாடுவது எனவும், தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளுக்கு வாழ்த்துகளும் பாராட் டும் தெரிவித்து. விருது வழங் கிய தமிழ்நாடு அரசுக்கும். தமிழ் நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர் களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது எனவும், பெரியார் 1000- வினா - விடை மாணவ மாணவிகளுக்கான போட்டி தேர்வினை தலைமை அறிவித்த அதே நாளில் நடத்துவ தோடு ஏராளமான மாணவ, மாணவிகளை பங்கேற்கச் செய்வது எனவும், உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலை நாளிதழ் சந்தாவை புதுப்பிப்பதும் புதிய சந்தா சேர்ப்பது எனவும், தஞ்சையில் அக்டோபர்  6இல் அன்று தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் தலைமையில் நடை பெறும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில். தமிழ் நாடு முதலமைச்சர் சமூகநீதிக் கான சரித்திர நாயகர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பாராட்டு விழாவில் திருவாரூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்வது எனவும், தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நாகை மாவட்ட இரட்டை மதகடி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரும். திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் கோ.செந்தமிழ்ச்செல்விக்கு வாழ்த் துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதோடும். தமிழ்நாடு அரசுக்கு கழக இளைஞரணி சார்பில் இக் கூட்டம்  நன்றியை தெரிவிக்கிறது எனவும், கழக இளைஞரணி சார்பில் குருதிக் கொடை அமைப்பை தந்தை பெரியார் பிறந்த நாளில் தொடங்குவது எனவும் கலந் துரையாடலில் தீர்மானிக்கப் பட்டது.

புதிய பொறுப்பாளர்கள்:

திருவாரூர் மாவட்ட இளைஞரணி துணை தலைவர் அ.ஜெ.உமாநாத் (திருத்துறைப் பூண்டி), மாவட்ட இளைஞ ரணி துணைச் செயலாளர் அ.செல் வகுமார். (திருவாரூர்). 

அ.செல்வகுமார் நன்றியுரை கூறினார். நிகழ்வில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோ.செந்தமிழ்செல்விக்கு கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினர்.

No comments:

Post a Comment