காலனிய ஆதிக்கம் கைத்தடியில் மட்டுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 31, 2023

காலனிய ஆதிக்கம் கைத்தடியில் மட்டுமா?

சென்னை, ஜூலை 31- இந்தியக் கடற்படையில் காலனிய ஆதிக்க மரபின் தொடர்ச்சியை அகற்றும் வகையில் கையில் ‘பேட் டன்' எனப்படும் கைத்தடி வைத்திருக்கும் நடை முறை நிறுத்தப்பட்டுள்ள தாம். 

இது ‘அமிர்த காலம்’ என்பதால் இனி காலனி ஆதிக்க மரபுக்கு வேலை இல்லை என்றும், அது அதிகாரத்தின் குறியீடு என்றும் அறிவித்திருக்கி றார்களாம். மகிழ்ச்சி தான். ஆனால், வெறும் ‘பேட்டனி'லா இருக்கி றது ஆதிக்க மரபு? கால னிய ஆதிக்கத்தின் எச்ச மாக இருக்கும் ஆளுநர் பதவியை ஒன்றிய அரசின் கைத்தடியாகக் கொஞ்சமும் வெட்கமில்லாமல் இன்னமும் பயன்படுத்திக் கொண்டு, இன்னும் சொல் லப் போனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுக ளைத் தடுப்பதற்கென்றே பயன்படுத்திக் கொண்டு ‘பேட்டனை' நிறுத்துகி றோம் என்பதெல்லாம் செக்கில் ஆட்டிய சுத்த மான உருட்டு அல்லவா? 

காலாவதியாகிப் போன காலனியச் சட்டங் களை இன்றும் நடை முறையில் வைத்துக் கொண்டும் புதுப்பித்துக் கொண்டும் தங்கள் ஆதிக் கத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. தேசியப் பாதுகாப்புச் சட்டம் என் கிறது... உப்பா என்கிறது... விசாரணை அவசிய மின்றி ஆண்டுக் கணக் கில் சிறையில் தள்ளுகி றது. மாநில உரிமைகளை யும், பல்வேறு தேசிய இனங்களின் உரிமைக ளையும் நசுக்கிக் கொண் டிருக்கிறது. இவையெல் லாம் காலனிய ஆதிக்கப் போக்கன்றி வேறென்ன?

காலனிய நடைமுறை கள் அகற்றப்பட வேண் டும் என்று பேசிக் கொண்டு, நாடாளுமன்றத்தில் செங்கோல் தூக்குவோம் என்பதெல்லாம் எத்தகைய முரண்பாடு? இங்கிலாந்து மன்னர் சார்லசின் பதவியேற்பு விழாவைக் கண்டு சூடுபோட்டுக் கொண்ட கதை தானே செங்கோல் கூத்து!? அது மட்டுமா? காலனியக் காலமே காலா வதி ஆனதென்றால், அதற் கும் முந்தைய மனுதர்ம, வேதக் குப்பைகளைத் தூக்கிக் கொண்டு வந்து இன்றும் நடைமுறைப்ப டுத்த முனைவது எத்த கைய கோமாளித்தனத் தில் சேரும்?

- சமா


No comments:

Post a Comment