புதுமைப்பெண் திட்டத்தால் கூடுதலாக உயர்கல்விக்கு சென்ற 20,477 மாணவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 10, 2023

புதுமைப்பெண் திட்டத்தால் கூடுதலாக உயர்கல்விக்கு சென்ற 20,477 மாணவிகள்

சென்னை, ஏப். 10- தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று திமுக அரசு ஆட்சியைப் பிடித்தது.  மகளிர் சாதாரண அரசுப் பேருந்து களில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று மாநில அரசு அறிவித்தது. இதனால்  இன்றுவரை மகளிர் கோடிக் கணக்கான பயணங்களை மேற் கொண்டுள்ளனர். பெண்கள் உற்சாகமாக அலுவலகங்களும் பிற பணிகளுக்கும் யாருடைய கையையும் எதிர்பாராமல் சென்றுவரு கின்றனர்.

மகளிர் உரிமைத் தொகை 

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்திருந்த உதவித் தொகை திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி  பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் முதலமைச்சர் தொடங்கி வைக்க வுள்ளார். தகுதி வாய்ந்த குடும்பத்தின் குடும்பத்  தலைவிகளுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப் படும். இதற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு உத விய அரசு குடும்பத்தில் கல்வி பயிலும் பெண்களின் கல்விக் கும் மாதந்தோறும் ரூ. 1000 வழங்கி வருகிறது. இந்த ஆயி ரம்  ரூபாய் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் வழங்கப்படு கிறது. இந்தப் புதுமைப் பெண் திட்டம் ஏற்கெனவே முத்தமி ழறிஞர் கலைஞர் அறிமுகப் படுத்திய மூவலூர் இராமாமிர் தம் நினைவு திருமண நிதியு தவித் திட்டத்தின் மாறுபட்ட வடிவமே.

புதுமைப்பெண்

தமிழ்நாடு அரசு புதுமைப் பெண் என்ற  புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை படித்த பெண்கள் குடும்ப  சூழல் காரணமாக உயர்கல்வி தொடரா மல் இருப்பதை உணந்த தமிழ்நாடு அரசு  புதுமைப் பெண் திட்டத் தின் கீழ் ஆறாம்  வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை அரசுப்  பள்ளியில் படித்த பெண்கள் உயர்கல்வி பெறுவதற்காக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தால் ஒவ்வொரு மாதமும் 2.2 லட்சம் மாணவிகள் பயனடைந்துவரு கின்றனர். இந்தத் திட்டத்தால் உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை 29 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது, கூடுதலாக 20,477 மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர்.

மகளிர் சுய உதவி குழுக்க ளுக்கு நடப்பாண்டில் ரூ. 24,712 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும்  ஆண்டில் ரூ. 30,000 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயகாலில் நின்று தனக்கும் தன் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள வாழ்வு வாழப் பெண்களுக்கு இத்திட்டம் வழிவகுத்துத் தந்துள்ளது.

இவ்வாறு தமிழ்நாடு அர சின் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment