பெங்களூரு, மார்ச் 31 கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக ஏபிபி, சி ஓட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந் துள்ளது. கருநாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மேனாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஏபிபி, சி ஓட்டர் ஆகிய நிறுவனங்கள் இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றிப் பெறும் என கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளன. அதில்,224 இடங்களைக் கொண்ட கருநாடகாவில் காங்கிரசுக்கு 115 முதல் 127 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 68 முதல் 80 இடங்களும், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 23 முதல் 35 இடங் களும் மற்ற கட்சிகளுக்கு 2 இடங்கள் கிடைக்கும் என தெரியவந் துள்ளது.
Friday, March 31, 2023
கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment