மக்கள் விரோத ஃபாசிச பா.ஜ.க.சனாதன சக்திகளைக் கண்டித்து எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 27, 2023

மக்கள் விரோத ஃபாசிச பா.ஜ.க.சனாதன சக்திகளைக் கண்டித்து எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

- அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

சென்னை, பிப்.27- மக்கள் விரோத ஃபாசிச பா.ஜ.க. உள்ளிட்ட சனாதன சக்திகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவன - தலைவர் எழுச்சித் தமிழர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நாளை (28.2.2023) சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 3 மணியளவில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தமிழ்நாடு காங்கி ரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாகி மு.வீர பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப் பினர் அப்துல் சமது, ம.தி.மு.க. தலைமை கழகச் செயலாளர் துரைவைகோ முதலியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்த வுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், ந.செல்லதுரை, ச.அம்பேத்வளவன், இர.பு.அன்புச் செழியன், வி.கோ.ஆதவன், பெ.ரவி சங்கர் ஆகியோர் இந்த கண்டன ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்புப் பணிகளை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment