கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்
'தினமலர்' திரிநூல் ஏட்டுக்குத் திரா விடர் கழகத் தலைவர் என்றால் சிம்ம சொப் பனம்தான்.
அவ்வப்பொழுது கரித்துக் கொட்டுவது, காலித்தனமாக எழுதுவது, வன்முறையை ஏவுவது என்பதைப் பிழைப்பாகக் கொண்டு வருகிறது.
'தினமலர்' வார மலரில் 3.3.2019 வெளி யிட்ட அதே கேள்வி -பதில் பகுதியை அட் சரம் பிறழாமல் தினமலர் குழுமத்தைச் சேர்ந்த 'காலைக் கதிரில்' 30.10.2022 அன்று வெளியிட்டது.
ஆஷ்துரைக்கு ஒரு வாஞ்சிநாதன், காந்தியாருக்கு ஒரு கோட்சே போல வீரமணிக்கு ஒருவன் என்ற முறையிலே 'காலைக்கதிர்' 'தினமலரில்' (எழுதுபவர் பெயர் மட்டும் மாற்றம்! என்னே பித்தலாட்டம்!) வெவ்வேறு தேதிகளில் வெளி வந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறைத் தலைமை இயக்குநருக்குப் புகார் (13.1.2023) செய்தும், செயல்பாடு என்ன என்று தெரியவில்லை.
'தினமலரின்' விஷமம் முடியவில்லை. மதுரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட (27.1.2023) சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் மாலை நேர திறந்த வெளி மாநாட்டில் தி.மு.க. பொருளாளர் மானமிகு டி.ஆர். பாலு அவர்களின் பேச்சுக்கு உள்நோக்கம் கற்பித்து இம்மாதம் 4ஆம் தேதி தினமலரில் "இது உங்கள் இடம்" என்ற பகுதியில் (4.2.2023) கடிதம் ஒன்றை வெளியிட்டது.
'தினமலர்' குழுமத்தைச் சேர்ந்த "காலைக்கதிர்" என்ற நாளேட்டில் (7.2.2023) அதே கடிதத்தை (இந்த முறை எழுதியவரின் பெயரை மாற்றவில்லை) வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட்டுவரும் 'தினமலர்' 'காலைக்கதிர்' மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
காவல்துறைத் தலைமை இயக்குநரிடம் நேர்முகமாகப் புகார் கடிதம் கொடுத்தும் கோப்பு அசையாதது ஏன்? திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஒரு தனி மனிதரல்ல.
தமிழ்நாட்டு மக்களுக்கான தனித் தன்மை வாய்ந்த தலைவர் - முதல் அமைச்சரின் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தந்தை பெரியாரின் வழித் தோன்றல்! என்பது நினைவிருக்கட்டும்!