Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
அம்பேத்கரை முழுமையாக அறிதல் 'முரசொலி' தலையங்கம்
February 15, 2023 • Viduthalai


அடுத்ததாக அண்ணல் அம்பேத்கர் குறித்து பாடம் எடுக்கத் தொடங்கி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் 'அம்பேத்கர் பற்றி பலரும் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை. அவரை அரசியல் சார்ந்து மட்டுமே அனைவரும் பேசுகின்றனர். அரசியலுக்காக மட்டும் பயன்படுத் துகின்றனர்" என்று வருத்தப்பட்டு இருக்கிறார் ஆளுநர். அம்பேத்கரை முழுமையாக அவர் அறிந்திருக்கிறாரா என்பதை அவர் உரை மூலமாக அறிய முடியவில்லை. அம்பேத்கரை அறிய வேண்டுமானால் கீழ்க்கண்ட அவரது புத்தகங் களை பரிந்துரை செய்கிறோம்,

1. Castes in India

2.The Annihilation of caste.

3. Ranade, Gandhi and Jinnah

4. Mr. Gandhi and Emancipation of Untouchables

5. What Congress and Gandhi have done to the Untouchables

6.State and Minorities.

7. Who were the Shudras

8. The Untouchables

9. Riddles in Hinduism

10. Manu and the Shudras

இவை அம்பேத்கரின் குறிப்பிடத்தகுந்த சமூக நூல்கள், இந்தியச் சமூக அமைப்பைப் புரிந்து கொள்ள உதவுபவை மட்டுமல்ல, ஆரியத்தின் அனைத்து மோசமான கூறுகளையும் சமற்கிருத மூலங்களின் மூலமாக அம்பேத்கர் விளக்கினார். இந்த எழுத்துகளை உள்வாங்கி இருந்தால் அம் பேத்கரையும் மோடியையும் ஒப்பிடும் புத்தகத்தை ஆளுநர் அவர்கள் வெளியிட முன்வந்திருக்க மாட்டார்கள்.

ஆளுநருக்கு அண்ணல் அம்பேத்கரையும் தெரியவில்லை, பிரதமர் மோடியையும் தெரிய வில்லை. சட்ட அமைச்சர் பதவியில் இருந்து விலகும்போது ஆற்றிய உரையில் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிட்டார்கள் 

“இந்து மதத்தின் ஆன்மாவான வகுப்புகளுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வையும், பாலினங் களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வையும் அப் படியே விட்டு விட்டுப் பொருளாதாரப் பிரச் சினைகள் குறித்த சட்டங்களை உருவாக்கிக் கொண்டே செல்வது என்பது. நம்முடைய அரசிய லமைப்புச் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கி விடும். இது சாணக்குவியலுக்கு மேலே மாளிகையைக் கட்டுவதைப் போன்று ஆகிவிடும்" என்று குறிப்பிட்டார்கள். இரத்த பேதம், பால் பேதம் ஆகியவற்றைத் தடுப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் ஜி.எஸ்.டி.யில் வரி வசூலாவது நாளுக்குநாள் கூடிவருகிறது. வங்கிகளில் கணக்குத் தொடங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்று பேசும் பா.ஜ.க. கூட்டத்தின் பிரதிநிதியான ஆளுநர், தமிழ்நாட்டுக்கு வந்து அம் பேத்கர் பாடம் எடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

இவர்க்கு ஏன் திடீரென அம்பேத்கர் பாசம்? வேறொன்றுமில்லை. 'சமூக நீதி’ என்ற சொல் அவருக்கு எரிச்சலைத் தருகிறது. அதனால் 'சமூகநீதி' யைக் குற்றம் சாட்ட அம்பேத்கரை போர் வையாகப் பயன்படுத்திக் கொள்கிறார் ஆளுநர்.

தமிழ்நாட்டில் ஜாதித் தீண்டாமை தாண்டவம் ஆடுகிறதாம். ஆனாலும் நாம் சமூகநீதி பேசுகிறோமாம். குற்றம் சாட்டுகிறார் "சனாதனம்' பேசும் ஆளுநர். சனாதனம் என்பது தமிழ்நாட்டில் தான் தோன்றியது என்று சொன்னவர் ஆச்சே அவர்!

இதுதான் சமூகநீதியா. இதுதான் சமூகநீதியா என்று ஏதோ சமூகநீதிப் போராளியைப் போல ஆளுநர் கேட்கிறார். சமீபத்திய உதாரணங் களையே சொல்கிறோம்...

புதுக்கோட்டைமாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள், கோவிலுக்குள் வரக்கூடாது என்று தடுக்கப்படுகிறார்கள் என்பதைக் கேள்விப் பட்டதும் அவர்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறார் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவும், காவல்துறை கண்காணிப்பாளர் வந்தி தாவும். அப்படி அழைத்துச் சென்றால் ஊர்க்குத்தம் ஆகிவிடும் என்று ஒரு பெண் ஆட்டம் செய்து தடுக்கிறார். உடனடியாக அவரைக் கைது செய்ய உத்தரவு போடுகிறார்கள் ஆட்சியரும். எஸ்.பி.யும் வன்கொடுமைச் சட்டமும் பாய்கிறது அதன்பிறகு பட்டியலின மக்கள் அனைவரும் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் சமூகநீதியாகும்!

தென்காசி மாவட்டம் - பாஞ்சாக்குளம் கிராமத்துக் கடையில் பட்டியலின குடும்பத்துப் பிள்ளைகளுக்கு பொருள்கள் தரப்படவில்லை என்ற செய்தி கிடைக்கிறது. உடனே சங்கரன் கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி அங்கு சென்று விசாரணை நடத்துகிறார். வருவாய்த் துறை விசாரணை செய்து, அந்தக் கடைக்கு சீல் வைக்கப் படுகிறது. தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டார்கள். இதுதான் தமிழ்நாட்டின் சமூகநீதியாகும்!

சேலம் மாவட்டம் - திருமலைகிரி கிராமத்து கோவிலுக்குள்நுழைந்த பட்டியலின இளைஞரை ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம் கடுமை யாகத் திட்டினார். உடனடியாக அவர் கைது செய் யப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் சமூகநீதி!

தென் முடியனூர் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல 80 ஆண்டுகளாக அனுமதிக்கப் படவில்லை, பட்டியலின மக்கள் 200 பேரை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ். மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் ஆகியோர் சென்றார்கள். "எங்கள் கனவு நிறைவேறியது என்று அம்மக்கள் சொன்னார்கள். இதுதான் சமூகநீதி!

வேங்கைவயல் கிராமத்து குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் ஜாதி வன்மம் மட்டுமல்ல. வேறு சில சதிச் செயல்களும் இருக்கின்றன. இதனை சி.பி.சி.அய்.டி. காவல் துறை விசாரித்துக் கொண்டு இருக்கிறது. உண்மைக் குற்றவாளிகள் விரைவில் பிடிபட இருக்கிறார்கள்.

இதுதான் சமூகநீதியின் ஆட்சியாகும். திராவிட மாடல் ஆட்சியாகும். வன்மத்துடன் ஜாதீயம் தலைதூக்கினால், அதனை உடனடியாகத் தடுத்து நடவடிக்கை எடுக்கும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி செயல்பட்டு வருகிறது. இதைப் பாராட்ட மனம் இல்லாமல் ஓரவஞ்சனையாக 'சமூகநீதி மீது பாய்ந்திருக்கிறார் ஆளுநர். 

ஆளுநர் அவர்களே! 'நாகர்கள், திராவிடர்கள் இரண்டும் ஒரே பெயர்கள்கள்தான். ஒரு காலத்தில் இந்தியா முழுமைக்கும் திராவிடர்கள் பரவி இருந்தார்கள்’ என்று சொன்னவரும் அண்ணல் அம்பேத்கர் என்பதை அறிவீர்களா?

- முரசொலி தலையங்கம், 15.2.2023


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn