செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 31, 2023

செய்திச் சுருக்கம்

மாற்றம்

செய்தித்துறை இயக்குநர் உள்பட தமிழ்நாடு முழுவதும் 41 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய செய்தித்துறை இயக்குநராக டி.மோகன், இந்து அறநிலையத் துறை ஆணையராக முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத் திட்டத் திற்கான தற்காலிக ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற உள்ளது என அதிகாரிகள் தகவல்.

புத்தகம்

தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களின் சிறப்புகள் குறித்த ஒளிப்படங்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய புத்த கங்கள் முக்கிய விருந்தினர்கள் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு வழங்கப்பட உள்ளது என சுற்றுலாத் துறை தகவல்.

விண்ணப்பிக்க...

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 10ஆம் வகுப்பு தேர்வு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு, 2ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தவறிய தகுதியான தனித் தேர்வர்களிடமிருந்து தக்கல் முறையில் இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினற்ன என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

கருவி

மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களை சோதனை செய்யவும், அபராதம் விதிக்கவும் 90 இ-சலான் கருவிகள் மற்றும் 90 மூச்சு சோதனை கருவிகளை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கினார்.

அபராதம்

சென்னையில் போதையில் வாகனம் ஓட்டிய 772 பேர்களிடம் ரூ.80.55 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட் டது. மேலும் நீதிமன்றம்எச்சரித்தும் அபராதம் செலுத் தாத 311 நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


No comments:

Post a Comment