பாராட்டத்தக்க 'திராவிட மாடல்' ஆட்சியின் புயல்வேக செயற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 24, 2023

பாராட்டத்தக்க 'திராவிட மாடல்' ஆட்சியின் புயல்வேக செயற்பாடு

கேரளா வைக்கம் பெரியார் நினைவகம் புனரமைக்க 

தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு

சென்னை, ஜன.24- கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் தந்தை பெரியார் நினைவகத்தில் நேற்று (23.1.2023) பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைக்கு கீழ் வைக்கப் பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 

இந்நிகழ்வின்போது, செய்தி மக் கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், பொதுப் பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் 

இரா.விஸ்வநாதன், தலைமைப் பொறியாளர் இளஞ்செழியன், தலைமைக் கட்டட கலைஞர் மைக்கேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்ட தன் நினைவாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கம் பகுதியில் தந்தை பெரியார் அவர்களின் சமூக போராட் டத்தினை நினைவுகூரும் வகையில் 70 சென்ட் பரப் பளவில் நினைவகக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நினைவகத்தில் 66.09 சதுர மீட்டர் அருங்காட்சியக கட்டடம், 84.20 சதுர மீட்டர் நூலக கட்டடம், சிறுவர் விளையாட்டு பூங்கா, இரு பாலருக்கான கழிப்பறை கட்டடம், சுற்றுச்சுவர் வசதி ஆகியவற்றுடன் அமையப்பெற்றுள்ளது. மேலும், தந்தை பெரியார் அவர் களின் அமர்ந்த நிலையில் உள்ள உருவச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. பெருமை மிகு அடையாளமாகத் திகழும் இந்நினைவகத்தில் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு, போராட்டங்கள், பெரியார் அவர்களை சந்தித்த தலைவர்கள், பெரியார் அவர்கள் பங்கேற்ற போராட்டங்கள் மற்றும் ஆற்றிய பணிகள், உள்ளிட்ட ஒளிப்படங்களின் தொகுப்பு தமிழ், மலை யாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம் பெற்றுள்ளது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததை அடுத்து இந்நினைவகத்தில் கேரளா அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பெரியார் அவர்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டு சமூக நீதி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

இந்த நினைவகத்தில் ஆய்விற்குப் பின் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய ஆணையை ஏற்று, நானும், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் ஏனைய பொறி யாளர்களுடன், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் நேற்று (23.1.2023) ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. 

தந்தை பெரியார் அவர்கள் கேரள மாநிலம், வைக்கம் பகுதியில் 1924 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாபெரும் போராட்டத்தை இங்கே நடத்தினார்கள். அதாவது, ஈழவர்கள், புலையர்கள் தெருவுக்குள்ளே போகக்கூடாது என்ற நிலையை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அந்த போராட்டம் நடைபெற்றது. 

வைக்கம் போராட்டம் என்பது அந் தக் காலத்தில், தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பேசப்பட்ட ஒரு மாபெரும் போராட்டம். தந்தை பெரியார் தலைமையில் வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தால் ஒரு முறைக்கு, இரண்டு முறை சிறைக்குச் சென்றார்கள். 

எனவே, அந்த நினைவுகளைப் போற்றுகின்ற வகையில், நாட்டு மக்களுக்கும், எதிர்கால இளைஞர் களுக்கும் இந்நிகழ்வினை அடையாளப்படுத்த வேண் டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே 1984 இல் எழுதப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், இங்கே கேரள அரசின் சார்பாக சுமார் 70 சென்ட் இடத்தை தமிழ்நாடு அரசிற்கு வழங்கியிருக்கிறார்கள். 

அந்த இடத்தில்தான் இப்படியொரு நினைவகம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து 1984 இல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1994ஆம் ஆண்டு இந்த கட்டடம் திறந்து வைக்கப்பட் டிருக்கிறது. இதனுடைய மொத்த பரப்பளவு ஏறத்தாழ 700 சதுர அடிதான். இதில் தான் தந்தை பெரியாருடைய ஒளிப்படக் காட்சி வைக்கப்பட்டி ருக்கிறது. அரசால் இந்த இடத்தை கொடுக்கின்றபோது அதில் அலுவலர்கள் தங்கியிருக்கிற குடியிருப்பு இருந் திருக்கிறது. அது மிக மோசமான நிலையில் தற்போது உள்ளது. இதனை எல்லாம் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்யப்பட்டது. 

மேலும், தந்தை பெரியார் அவர்கள் இந்த மண்ணுக்கு வந்து போராடியது, அடுத்த 2024ஆம் ஆண்டுடன் 100 ஆண்டு காலம் முடிவடைகிறது. தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் வருகை புரிந்து 100 ஆண்டுகள் முடிகின்றதை மனதில் வைத்துக் கொண் டுதான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தற்போது இங்கு என்ன நிலையில் இருக்கிறது என்பதற்காக என்னையும், அமைச்சர் அவர்களையும் அனுப்பி அதனுடைய நிலை குறித்தும், இதை புனரமைக்கலாமா, புதுப்பிக்கலாமா, புதியதாக  கட்டலாமா  என்பது குறித்தும் துறை அதி காரிகளை அழைத்து ஆய்வு செய்யச் சொன்னார்கள். இதன் அடிப்படையில் நாங்கள் ஆய்வுகள் மேற் கொண்டோம். இங்கே இருக்கிற நிலைகளை முதல மைச்சர் அவர்களிடத்தில் போய் எடுத்துச் சொல்வோம். முதலமைச்சர் அவர்கள் நல்ல முடிவெடுப்பார்கள். 

எனவே ஆய்வுப் பணியை நாங்கள் மேற்கொள்ள வந்தோம், அந்தப் பணியை இப்போது நாங்கள் நிறைவு செய்திருக்கிறோம். ஏனைய திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பார்கள். 

-இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.


No comments:

Post a Comment