Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
January 13, 2023 • Viduthalai

 காக்க இதயம், காக்க - காக்க!

நம் நாட்டில் இதய நோய் காரணமாக ஏற்படும் மரணங்கள் மிக அதிகமாக உள்ளன என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

முன்பெல்லாம் முதிய வயதினருக்குத்தான் பெரும்பாலும் இந்நோய் தாக்குதல் ஏற்படும் என்ற நிலையும், கருத்தும் இருந்தது; ஆனால் அது இப்போது    உண்மையல்ல; இள வயதுக்காரர்கள் கூட திடீர் மாரடைப்பால் மரணம் அடைகிறார்கள் என்பதே நடைமுறையில் நாம் தெரிந்து கொள்ளும் வேதனைக்குரிய உண்மையாகும்!

இடதுதோளில் கீழிறங்கும் வலி அல்லது ஒரு வகை மூச்சுத் திணறல், திடீர் மயக்கம் போட்டு விழுந்தவுடன் மரணம் - இப்படிப் பலப்பல உண்டு என்றாலும்கூட, எவ்வித அறிகுறியும், முன்னெச் சரிக்கையுமின்றி திடீர் என்று மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டு சாவைத் தழுவுகின்ற நிகழ்வு களும்கூட உண்டு.

எனவே அடிக்கடி தக்க மருத்துவர்களை நாடி, உடற்பரிசோதனையைச் செய்து கொள்ளத் தவறா தீர்கள். அப்படி அவற்றை நீங்கள் அலட்சியப் படுத்தினால் கடும் விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படக் கூடும்!

இதய நோய் வகைகளில் பல வகை உண்டு. எனவே சின்னச் சின்ன அறிகுறியாக இருந்தாலும் அதனை அலட்சியம் செய்யாமல், உடனடியாக மருத்துவரை அணுகி, போதிய ஆய்வுகளை நடத் துவதன்படி - கடல் அலை வரும் போது தலையைத் தூக்கி விட்டால், அந்த அலையை பின் வாங்கச் செய்து தப்பித்துக் கொள்ளல் போன்று நாமும் தப்ப முடியும்.

சிலரின் உடற்கூறில் இதயத் துடிப்பு (Heart Beats) மிக மிகக் குறைவாக இருக்கும் - அதனைக் கூடுதலாக்கவும், அப்படிப்பட்டவர்கள் - இருக்க வேண்டிய அளவு துடிப்புகள் மிக மிகக் குறைவாக இருக்கும் போதும், அதனை குறிப்பிட்ட அளவுக்கு வருவதற்காகத் தூண்டும் சிகிச்சைகளை - மருந்து,  மாத்திரை மூலமோ அல்லது வேறு மருத்துவச் சிகிச்சை மூலமோ மருத்துவர்கள் தருவார்கள்.

அதைவிட மற்றொரு வகையும் உள்ளது. அது ஓர் இதயத் துடிப்பிற்கும், மற்றொரு துடிப்பிற்கும் உள்ள இடைவெளி சரியாக அமையாது  - பல துடிப்புகள் தொடர்ந்து இல்லாமல் (Missed Beats)  தவறிடக் கூடும்.

இந்தத் தவறும் இதயத் துடிப்பு, இதனால் சிலருக்கு பாதிப்பின்றியே அவர்கள் பல காலம் வாழ்வார்கள். 'அரித்மியா' (Arythmia) என்ற இது அளவுக்கு அதிகமாக 1,2,3 விட்டு விட்டு அடிப்பதைத் தாண்டி அடிக்கடி இப்படி அடித்தால் அதனை E.C.G.  என்ற (Electro Cordiogram)  படம் எடுத்தோ, எக்கோ (Eco) என்ற பரிசோதனை மூலமோ அறிந்திட வேண்டும். அதனை அலட் சியப்படுத்தக் கூடாது.

உடலில் உள்ள மின்சாரத் திறன் மூலம் இத்துடிப்பினை ஒழுங்குபடுத்தும் சிகிச்சையை சரியான நேரத்தில் செய்துகொண்டால், தொடர்ந்து வாழ முடியும் - அச்சப்படத் தேவையில்லை.

'ஆஸ்பிரின்' மாத்திரை ஓர் இதயத் துடிப்புத் தடை  அடைப்பான் - தடுப்பான் ஆகும். மருத் துவர் பரிந்துரைப்படிதான் எடுக்க வேண்டும். கடையில் நாமே சென்று வாங்கி விழுங்கி விடக் கூடாது! மருந்தில் விளையாடக் கூடாது!

இதற்குரிய தற்கால நவீன சிகிச்சை முறை  (Ablation) சிகிச்சை என்பதாகும். எது இதயத் துடிப்பிற்கு தடையாக இருக்கிறதோ அந்தத் தடுப்பினை அகற்றிட நோயாளியின் உடலின் உள்ள மின்சாரத்தைப் பயன்படுத்தியே, மாற்று இதய சிகிச்சை (Bypass surgery) மாதிரி 3,4  மணி நேர முழுமயக்கம் தந்து நடத்திடும் ஆபத்து நிறைந்த (Risk Involved) அறுவைச் சிகிச்சை மூலம் அதனை செய்து கொள்வது அவசிய மானதாகும். அமெரிக்காவில் பிரபலமான டாக்டர் ஒருவரால் இது செய்யப்படுகிறது.

இது இப்போது பல நாடுகளில் பரவியிருக்கக் கூடும்.

சிற்சில நேரங்களில் இந்தச் சிகிச்சை பலனளிக்காமல், பக்கவாதம் அல்லது மரணம்கூட ஏற்பட்டு தோல்வியில் முடியலாம்.

அறுவை சிகிச்சை அறைக்கு நோயாளி போகு முன்தான் மருத்துவமனைகளின் முழுப் பொறுப்பு.  இசைவுதான் என்று எழுதி வாங்கித்தானே மருத் துவர்கள் தங்கள் சிகிச்சையைத் துவக்குகின்றனர்!

அபாயத்தைத் தலை மேல் வைக்க அஞ்சினால் நம் வாழ்வில் எதையும் நாம் பெறவே முடியாது!

நடந்து செல்பவர்கள்மீது கார்கள் மோத வில்லையா? தேநீர்கடைக்குள் லாரிகள் புகுந்து மரணங்களை ஏற்படுத்தவில்லையா?

ஆபத்து எங்கேதான் இல்லை  - எனவே அச்சமின்றி துணிந்து இறங்குதல் தேவை - தேவைப்படும்போது. 


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
February 07, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn