பிச்சைக்கார உஞ்சவிருத்தி பார்ப்பனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 31, 2023

பிச்சைக்கார உஞ்சவிருத்தி பார்ப்பனர்

பார்ப்பனர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம். ஆகவே ஒரு நூலை தங்கள் முதுகில் தொங்க விட்டுக் கொண்டு, தாங்கள் உயர் ஜாதியினர் என்று சொல்லிக் கொள்வார்கள். அந்த சாதாரண பருத்தி நூலை பூணூல் என்பார்கள்.

மேலும் பரம்பரையாகவே அவர்கள் பிச்சைக் கார உஞ்சவிருத்தி வம்சத்தினர். இதையெல்லாம் மறைக்க மற்றவர்களை தாழ்ந்த ஜாதியினர் என்று இழிவுபடுத்துவார்கள். உயர்ஜாதி என்ற மானயயைத் தவிர வேறுஏதாவது உயர்ந்த செயல் அவர்களிடம் இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது.

ஆகவே அந்த பிச்சைக்கார உஞ்சவிருத்தி பரம்பரையில் வந்த ரங்கராஜ் பண்டாரம் என்பவர் தன் ஜாதியைப் பற்றிப் பெருமையடித்துக் கொண்டார். ஆனால் அதே சமயம் கடுமையாக 80 ஆண்டுகள் உழைத்து சுயமாக முன்னேறிய முத்தமிழறிஞர் கலைஞரை  அவரின் திறமைகளை அலட்சியப்படுத்தி - புண்ணியத்தால்தான் முதல மைச்சர் பதவி கலைஞருக்கும் அவர்  குடும்பத் தினருக்கும் வந்தது என்று உளறிக் கொட்டி யிருக்கிறார்.

புண்ணியம் என்பது முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்திற்கு மட்டும் கடவுள் தந்த போனசா? கரு வறையையே பரம்பரை, பரம்பரையாக பிடித்துக் கொண்டு இருக்கும் பார்ப்பனர்களுக்கு அந்த புண்ணியம் ஏன் கிடைக்க வில்லை?

திறமையும், உழைப்பும், அறிவும் இருந்தால் மட்டுமே மேல் நிலைக்கு வர முடியும். இதில் ஏதாவது இந்த உஞ்சவிருத்தி பரம்பரையினருக்கு இருக்கிறதா? சூழ்ச்சியும் ஏமாற்று வேலையும் மட்டுமே ஒருவனை உயர்த்திவிடுமா?

உஞ்சவிருத்திகள் இதை உணரட்டும்!

- பெரியார் திறலோன்


No comments:

Post a Comment