தொலைத்தொடர்பில் லேசர் தொழில்நுட்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 26, 2023

தொலைத்தொடர்பில் லேசர் தொழில்நுட்பம்

தரவுகளை ஒளி மூலம் கடத்தும் மரபான கண்ணாடி இழைகளுக்குப் (opticfibre) பதிலாக லேசர் ஒளிக்கற்றைகளை இரண்டு காற்று அடுக்குகள் வழியாக செலுத்தும் முறையை மேரிலாண்ட் பல்கலைக்கழக இயற்பியலாளர் ஹோவர்ட் மில்ச்பெர்க் கண்டறிந்துள்ளார். இந்த சோதனையில் லேசர் ஒளிக்கற்றைகளின் நடுப்பகுதி வெற்றிடமாக்கப்பட்டுள்ளது.

ஒளிரும் டோனட்டுகளின் (doughnuts)  அடுக்குகள் போல் இவை காட்சி தருவதால் இதற்கு டோனட் முறை எனப் பெயரிட்டு உள்ளார்கள். இதற்குள் குளிர்ந்த காற்றும் அதற்கு மேல் சூடான காற்றும் குழாய் வடிவில் உருவாக்கப்படுகிறது. கண்ணாடி இழை முறையில் ஒளி புகும் மய்ய அச்சும் அதன் மேல் பிளாஸ்டிக் உறையும் உள்ள தைப் போன்று இந்த அமைப்பு விளங்குகிறது. இந்த சோதனையில் 50மீட்டர் நீளத்திற்கு அலை வழிகாட்டியை அமைக்க முடிந்தது. 

லேசர் கற்றையின் ஆற்றலை அதிகப் படுத்தி இதை கிலோ மீட்டர்களாக்குவதே இப்போதைய சவாலாகும். அந்த அளவிற்கு இட வசதியுள்ள சோதனைச் சாலைகளில் செய்து பார்க்க வேண்டும் என்கிறார் மில்ச் பெர்க். இது ராணுவ செயல்பாட்டிற்கு பயன் படுத்தக்கூடிய தன்மை கொண்டது என்றாலும் தானும் தனது குழுவினரும் பொருட் களின் வேதியியல் பண்புகளை கண்டறிவது போன்ற அறிவியல் முறைகளிலேயே கவ னம் செலுத்தப்போவதாக மில்ச்பெர்க் கூறு கிறார். இது போன்ற காற்றின் அடிப்படையில் இயங்கும் அலை வழிகாட்டிகள் ஒரு பொருளிலிருந்து வெளிப்படும் ஒளியை தொலை தூரத்தில் இருக்கும் அமைப்புக ளுக்கு செலுத்துவதால் ஆய்வு செய்ய வேண்டிய ஒரு மாதிரியின் அருகில் சென்று சோதனைகள் நடத்த தேவையில்லை.

No comments:

Post a Comment