Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
உண்ணுமுன் ஓர் உறுதி - தேவையான உறுதி? (1)
January 26, 2023 • Viduthalai

நேற்று  (25.1.2023) மாலை புகழ் வாய்ந்த ஆற்றலாளர் இதய நோய் மருத்துவர் டாக்டர் எழிலன் - அவர்களிடம் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். இவர் (நமது சீரிய திராவிடர் இயக்கச் செம்மலும், ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஆயிரமாயிரம் சாதனைகளைப் புரிந்து வருபவருமான சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் நா. எழிலன் அல்ல)   இதய நோய் நிபுணர்  (Interventional Cardiologist) ஆவார். (எனது மருத்துவர்களில் ஒருவரும்கூட) அவருக்கு 'மணிவிழா' - விழா (23.1.2023) நாளன்று செல்ல இயலாததால், சென்று கண்டு வாழ்த்தி விடை பெற்று உரையாடிய போது,  ஒரு சீனப் பழ மொழியைக் கூறினார். "வயிற்றைச் சரியாக வைத்துக் கொண்டால், உடல் நலம் எப்போதும் சீராக இருக்கும்" என்பதுதான் அந்தப் பழமொழி!

நினைத்துப் பார்த்து, சற்று அசைபோட்டுச் சிந்தித்துப் பாருங்கள். எவ்வளவு எளிமையான கருத்து- எவ்வளவு சிக்கலான சோதனையை உள்ளடக்கிய மூதுரை அது!

'வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சேர்த்த பொருள்' என்று சில நேரங்களில் - அது நம்மைவிட்டுப் போனதால் ஏற்படும் துன்பத்தின் வெளிப்பாடாக வரும் சொல்லது!

வயிற்றைச் சரியாக, 'கட்டி' வைத்தால் செரிமானக் கோளாறு வராது.

அதனால் ஏற்படும் பல நோய்களும், தொல்லைகளும் துன்பந் துயரங்களும்கூட நேராது அல்லவா?

ஆழ்ந்து எண்ணிப் பார்த்தால் நம்மால் அந்த எளிய நியதியைக் கடைப்பிடிக்க முடியாதா என்றால், நிச்சயம் கடைப்பிடிக்க முடியும்!

வாக்கில் தெளிவு இருந்தால் மட்டும் போதாது; மனதில் உறுதி வேண்டும். சபலங்களுக்குப் 'பலி'யாகக் கூடாது - 'பலி'யானால் காக்கும் உறுதி காற்றோடு போய் விடும் அல்லவா? எனவே மனதில் உறுதி வேண்டும்.

வாழ்வதற்காகத்தான் உணவு; உணவுக்காக வாழ்க்கை இல்லை! இன்றியமையாததும் கூட! ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை நாம் உண்ணும் முன்பு உறுதி எடுத்துக் கொண்டு உண்ணத் துவங்க வேண்டும்.

'உண்ணுமுன் எண்ணு மின்' என் இனிய தோழர்களே! 

எவ்வளவு சுவையாக இருப்பினும், 'வயிற்றில் கொஞ்சம் வெற்றிடம் - நிரப்பப்படாத வெற்றிடத் தோடு எழுவேன்' என்ற உறுதி மொழியுடன், உள்ளத்தின் உறுதிப்பாட்டுடன் அமர்க. அது அமிழ்து, அமிழ்து என்று அதன் சுவை நம்மைச் சுண்டி இழுத்தாலும் அதற்கு நாம் இரையாகி விடாமல் நமது 'இரையை' அளவோடு எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண் டால் வாழ்வு சுருங்காது; மருத்துவமனைகளைத் தேடி ஓட வேண்டிய நிலையும், செலவும் - சிற்சிலருக்கு தீராக் கடனும் ஏற்படவே ஏற்படாது என்பது உறுதி!

விருந்துகளுக்குப் போய் உண்ணுவதை கூடுமான வரை - முதுகுடி மக்கள் - தவிர்ப்பது நல்லது - சென்று அமர்ந்தால் சுவையும் - பக்கத்தில் எதிரிலே, அமர்ந்து உண்ணுபவர்களும் - உங்களைச் சுண்டி இழுத்து, நீங்கள் காத்து வந்த உறுதியைக் 'காலாவதி'யாக்கிட செய்யக் கூடும். எனவே செல்லுக; வெல்லுக என்று அனுப்பினால், குறிப்பிட்ட அளவோடு நில்லுங்கள் என்பதே நமது வேண்டுகோள்!

"இன்று ஒரு நாள்தானே; ஒரு நாளில் என்னவாகி விடப் போகிறது? - பரவாயில்லை, சாப்பிடுங்கள் - அல்லது சாப்பிடுவோம் - என்றால் உடல் நலக் குறைவிற்கு  அது ஆரம்பம்.  அதனால் ஏற்படுவது விருந்து சாப்பிட்டவருக்கு மட்டுமா மனக் கவலை? விருந்தளித்த நண்பர்களுக்கும்கூட வேதனை விலாவைத் தாக்க 'அய்யோ அவரது உடல் நலக் குறைவுக்கு நாம் அல்லவா காரணம் ஆகிவிட்டோம்' என்ற வேதனையில் வாடி வருந்த வேண்டிய நிலையும் ஏற்படாதல்லவா? எண்ணிப் பாருங்கள்!

திருவள்ளுவரின் 'மருந்து' என்ற தலைப்பில் உள்ள பத்துக் குறட்பாக்களை மீண்டும் மீண்டும் நான் படித்ததில், வியப்பில் ஆழ்ந்து உறைந்தே போனேன்!

2500 ஆண்டுகளுக்குமுன்பே எந்தத் துறையும் அவருக்கு அத்துப்படி என்று கூறுவதற்கு சான்றாவணமாக திருக்குறள் என்ற - 'சமயம் கணக்கர் மதிவழி கூறாத'  - நல்லறிஞராக நின்று மக்கள் சமுதாயத்தின் கலங்கரை வெளிச்சமாக வாழ்க்கைக் கப்பலில் பயணிக்கும் நாம், துன்பப் பாறைகளில் மோதி நொறுங்கி விடாமல் சிறக்க வள்ளுவப் பேராசன் வழி காட்டும் நெறியாளராக இருப்பதை எண்ணி எண்ணி வியப்பின் உச்சிக்கே சென்று அவரை மெச்சிக் கொண்டாடுகிறோம்.

அந்தக் குறளையும் - மருத்துவர்கள் அறி வுரைக் குரலையும் நாளையும் பார்ப்போமா?

(வளரும்)  


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn