சென்னை, டிச.31- வானொலியில் பண்பலை ஒலிபரப்பாகிய ஹலோ எப்.எம். சார்பில் 'கிரீடம் விருதுகள்' வழங்கும் நிகழ்ச்சி இன்று (31.12.2022) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒலிபரப்பாக உள்ளது.
பல்துறைகளில் சிறந்து விளங்கும் வித்தகர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக, 'கிரீடம் விருது' எனும் பெயரில் வழங்கி ஹலோ எப்.எம். சிறப்பு செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான ஹலோஎப்.எம். 'கிரீடம் விருது' அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று (31.12.2022) மாலை 5 மணிக்கு ஒலிபரப் பாகிறது. 4 மணி நேரம் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் சிறந்த அரசியல் ஆளுமை, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த எழுத்தாளர், மனிதநேய மாண்பாளர், சிறந்த டிஜிட்டல் திறமை, சிறந்த பாடலாசிரியர், சிறந்த இசையமைப் பாளர், சிறந்த பாடகர் சிறந்த பாடகி, சிறந்த விளையாட்டு வீரர் உள்ளிட்ட பிரிவுகளில் ஹலோ எப்.எம். 'கிரீடம் விருது'கள் வழங்கப்பட உள்ளன.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திரைப்பட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார். திரைக் கலைஞர் பிரபு, திரைப்பட இயக்குநர் ஹரி, எழுத்தாளர் ஜெயமோகன், வழக்குரைஞர் அ.அருள்மொழி, தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், பாடலாசிரியர் அறிவுமதி, பின்னணி பாடகர்கள் ஷங்கர் மகாதேவன், உன்னிகிருஷ்ணன் மற்றும் மனோ, இந்திய டேபிள் டென்னிஸ் அணி பயிற்சியாளர் ராமன் ஆகியோர் ஹலோ எப்.எம்.'கிரீடம் 2022' விருதுகளை அறிவிக்க உள்ளனர்.
12 பிரிவுகளிலும் விருது வெல்லப்போவதுயார்? என்பதை இன்று (31.12.2022) மாலை 5 மணிக்கு ஹலோ எப்.எம் ஒலிபரப்பில் கேட்டு அறியலாம்.
No comments:
Post a Comment