ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்




கேள்வி 1: இட ஒதுக்கீடை ரத்து செய்யவேண்டும் என்று கோரிய சட்டக்கல்லூரி மாணவிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து - மனுவை தள்ளுபடி செய்துள்ளதே? இட ஒதுக்கீடை எதிர்த்து வழக்கு தொடரவேண்டும் என்பவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்களா?

- ஆதவன், மயிலாடுதுறை

பதில் 1: பார்ப்பனப் பாம்புகள் அடிவாங்கி புற்றுக்குள் போனாலும், அடிக்கடி வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் தலையை நீட்டி வாலையும் நீட்டத் தவறவே தவறாது!

---

கேள்வி 2: குஜராத்திற்கு ரூ. 285.37 கோடி, தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.4 கோடி - விளையாட்டுத்துறை நிதி ஒதுக்கீட்டில் உள்ள இந்த பாரபட்சம் குறித்து?

- எழிலன், திருவாரூர்

பதில் 2: மனுமுறை தவறாமல் ஆட்சி செய்யும் நாட்டில் இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? "... ஒரு மாநிலத்திற்கு ஒரு நீதி...!"

---

கேள்வி 3: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது என்று நடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியுள்ளதே?

- ஆதித்தன், தென்காசி

பதில் 3: தேர்தல்கள் வரும்போது மட்டுமே குறைக்கப்பட முடியும் -  இது வித்தைக்காரர்களின் வித்தையாகும்!

---

கேள்வி 4: சீனாவின் அத்துமீறல்களைத் தொடர்ந்து ஒன்றிய அரசு மறைக்க முயல்வது ஏன்?

- தங்கம், வேலூர்

பதில் 4: தோல்விகளை மறைப்பது வாடிக்கை - இந்தக் காவி ஆட்சியில்! இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தல், டில்லி மாநகராட்சித் தோல்வி போன்ற முடிவுகள் - உதாரணங்கள்.

---

கேள்வி 5: லண்டன் தேம்ஸ் நதிக்கரையிலும் பெரும் பதவியில் இருக்கும் இந்தியர்கள் பார்ப்பனர்களை அழைத்து திதி கொடுக்கின்றனரே?

- மலர்மன்னன், தாம்பரம்

பதில் 5: பார்ப்பன 'ஆக்டோபஸ்' - அதன் கொடுங்கர நீளத்தின் தாக்கம் இது!

---

கேள்வி 6: 26 கோடி இந்தியர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு கண்காணிப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதே? 

- மாணிக்கம், சேலம்

பதில் 6: அதுபற்றி "வெள்ளை அடிக்கப்பட்டு"விட்டது. இப்போது ஏன்? "மூச்" 

---

கேள்வி 7: "நாட்டில் விற்கப்படும் 83 உயிர்காக்கும் மருந்துகள் தரமற்றவை" என்று ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளதே?

- சிந்து, நாகை

பதில் 7: ஒன்றிய அரசின் நடவடிக்கை இதன்மீது என்ன? 'சாப்கா சாத்' - 'சப்கா விகாஸ்' என்பது இதுதானோ?

---

கேள்வி 8: சாதாரணமான புயல் தான் - ஆகவே அதிகம் தமிழ்நாடு அரசைப் புகழவேண்டாம் என்று சுமந்து ராமன் கருத்துக் கூறியுள்ளாரே?

- செல்வி, நெல்லை

பதில் 8: 'சுமந்த இராமன்களுக்கு'... இது சம்பூகனைக் கொன்ற இராம இராஜ்ஜியம் அல்லவே! இராவண இராஜ்ஜியம் அல்லவா? அதனால் இந்த மனுதர்மப் பார்வை!

---

கேள்வி 9: சென்னை மேயரின் பாராட்டத்தக்க செயல்களைக் கூட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றனவே?

- இனியன், நெல்லை

பதில் 9: ஒரு பெண் மேயரின் துணிச்சல் மிக்க - கடமையாற்றிய வீரதீரத்தைப் பாராட்ட மனமில்லை. "ஜந்துக்களிடம்" வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

---

கேள்வி 10: பொது சிவில் சட்ட தனிநபர் மசோதா  தாக்கல் செய்யப்பட்டுள்ளதே - இது பூச்சாண்டி காட்டவா?

- உதயா, தஞ்சை

பதில் 10: அதிலென்ன சந்தேகம்? ஆர்.எஸ்.எஸ். தேர்தல் அறிக்கை செயல்பாடு, 2024 தேர்தலில் வடநாட்டில் பிரச்சார முதலீடு.

 

No comments:

Post a Comment