பகுத்தறிவுச் செம்மல் வீரமணி வாழ்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

பகுத்தறிவுச் செம்மல் வீரமணி வாழ்க!

கவி வித்தகர் புலவர் 

தில்லைக் கல்விக்கரசன்

பள்ளி செல்லும் இளம்பருவம் - அன்றே

பயின்றார் பெரியாரின் பகுத்தறிவை

உள்ளமும் திராவிடர் கழகத்தில் - நன்றே

ஒன்றாகி இணைந்து நின்றது

பெரியாரின் சிறப்புரைக் கூட்டங்கள் - அதில்

பேசி இளமையில் பெயர்பெற்றார்!

அரிதான பெரிய போராட்டம் - பல

அதிலும் போராடிச் சிறைசென்றார்

மூட நம்பிக்கை நிறைந்து - மக்கள்

முழுஅறி யாமையில் இருந்தநாளில்

சீடராய் வந்தார் பெரியார்க்கு - நல்ல

சிந்தனையைத் தூண்டினார் நாட்டினர்க்கு!

தெய்வங்கள் பலசொல்லித் திரியாதீர் - அதற்குத்

திருவிழாஎன்றெதுவும் செய்யாதீர்!

செய்யுங்கள் முடிந்ததை ஏழையர்க்கு - நாடு

சிறந்து உயர்ந்திட உழையுங்கள்!

என்றே எடுத்துச் சொன்னார் - பல

ஏட்டிலும் எண்ணத்தை வடித்தார்!

சென்ற பாதையை மாற்றியே - நல்ல

சிறந்த வழியைக் காட்டினார்!

சின்ன வயதில் இருந்தது - போன்றே

சிறப்புடன் பொதுப்பணி செய்கிறார்!

இன்னும் வாழ்க நூறாண்டு - என

எம்அய்யா வீரமணியை வாழ்த்துவமே!

***


No comments:

Post a Comment