Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
அயல் நாடுகளில் தமிழர் தலைவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள்!
December 02, 2022 • Viduthalai


பூமிப்பந்தில் ஏழு கண்டங்கள் இருக்கின்றன. 193 நாடுகள் பரவிக் கிடக்கின்றன. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் கால் பதித்திருக்கிறார். அயல் நாடுகளில் உரை நிகழ்த்தி இருக்கிறார். தந்தை பெரியாரின் கருத்துகளைப் பரப்பி இருக்கிறார். சுயமரியாதைத் தத்துவம், பகுத்தறிவுச் சிந்தனை, பெண் விடுதலைக் கருத்துகள், மனித உரிமைகள் பற்றி உரை நிகழ்த்தி இருக்கிறார்.

அவர் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய நிகழ்ச்சிகளில் சில: 

பிரிட்டன் நாடாளுமன்ற கட்டடத்தில், பிரபுக்கள் சபை(House of Lords) அரங்கில் 2004ஆம் ஆண்டு ஜனவ‌ரி மாதம்'G.U..போப்பும் - பெரியார் ஈ.வெ.ரா.வும்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். டென்மார்க் தலைநகரம் கோபன்கேஹனில் நடைபெற்ற உலக சமாதான மாநாட்டில் 'Human Rights and Peace' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

சிங்கப்பூர் மேனாள் குடியரசுத் தலைவர் C.V. தேவன் நாயர் மறைவையொட்டி சிங்கப்பூரில் 11.12.2005 அன்று சிங்கப்பூர் தமிழ் மொழி பண்பாட்டுக் கழக ஏற்பாட்டில் நடைபெற்ற இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில்  உரை நிகழ்த்தினார்.

அமெரிக்க அய்க்கிய நாட்டின் மேரிலாந்து மாநிலம் சில்வர் ஸ்பிரிங் நகரில் 22.9.2019 அன்று நடைபெற்ற பெரியார் மனிதநேய சுயமரியாதை பன்னாட்டு மாநாட்டில்  'The Future'  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

மியான்மர் நாட்டில் ரங்கூன் நகரில் பெரியார் சுயமரியாதை இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் உரை நிகழ்த்தினார்.

ஜெர்மனி நாட்டில் கொலோன் நகரத்தில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் 27.7.2017 அன்று நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.

அமெரிக்காவில் இல்லினாய்ஸ் நகரில் அமைந்துள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மண்டபத்தில் 15.7.1986 அன்று, 'Seminar on Genocide of Tamils in Srilanka' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

கனடா நாட்டில் மெகில் பல்கலைக்கழகத்தில் 26.7.1986 அன்று உரை நிகழ்த்தினார்.

குவைத் நாட்டின் தலைநகர் குவைத்தில் இந்தியன் கம்யூனிட்டி பள்ளி, வள்ளல் ஆழ்வாரப்பன் அரங்கில், 15.10.2010 ஆம் ஆண்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் உரை நிகழ்த்தினார்.

துபாய் நாட்டில் 18.10.2010 அன்று பெரியார் பன்னாட்டு மய்யக் கிளைத் தொடக்க விழாவில் உரை நிகழ்த்தினார்.

இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்புவில் 24.9.1978 அன்று பம்பலப் பட்டி சரஸ்வதி மண்டபத்தில், டாக்டர் கோவூர் அரங்கில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் உரை நிகழ்த்தினார்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரத்தில் தியேட்டர் சணலா மண்டபத்தில் 16.09.1983 அன்று நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் உரை நிகழ்த்தினார்.

நெதர்லாந்து நாட்டில் ஆம்ஸ்டர்டாம் நகர், ராய் காங்கிரஸ் சென்டரில் 26.07.1992 முதல் 30.07.1992 வரை நடைபெற்ற பன்னாட்டு பகுத்தறிவாளர் மாநாட்டில்  (International Humanist Conference)  உரை நிகழ்த்தினார்.

இங்கிலாந்து தலைநகரம் லண்டன் நகரில் உள்ள  Red Square Conway  என்னுமிடத்தில் நடைபெற்ற லண்டன் மதச்சார்பற்றோர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.

ஜப்பான் நாட்டில் 23.6.1999 அன்று ஹிமேச்சிசுமினோ ஏற்பாட்டில் ஜப்பான் நாட்டில் ஒடுக்கப்பட்ட பிரிவாகிய புரோக்குமின்கள் குறித்து உரை நிகழ்த்தினார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் பான் நகரில் கிளே ஹவுஸ் மண்டபத்தில் 23.8.1997 அன்று நடைபெற்ற உலகத் தமிழ் பண்பாட்டியக்க தமிழர் எழுச்சி விழாவில் உரை நிகழ்த்தினார்.

தைவான் நாட்டில் தைபேய் என்னும் இடத்தில் இயங்கும் லுங்க்வா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சிறப்புகளைப் பட்டியலிட்டு உரை நிகழ்த்தினார்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image
நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
January 23, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn