பேச்சிப்பாறை சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டது
பேச்சிப்பாறை, நவ.22 குமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் பேச்சிப்பாறை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தந்தைபெரியார் சிலை அமைக்கப்பட்டது கடந்த அதிமுக ஆட்சியில். அங்கு தந்தை பெரியா ருடைய சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் கூறிய அறிவுறுத்தலின் படி மாவட்ட திராவிடர்கழக செயலாளர் கோ. வெற்றி வேந்தன் ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்களை சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்தார்.
இது தொடர்பாக ஊரக வளர்ச்சி ஆணையரிடமும் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாககோரிக்கை வைக்கப் பட்டது. கழகத்தின் கோரிக்கையை நிறைவேற்றும் ஊரக வளர்ச்சித்துறை உயரதிகாரிகளின் உத்தரவின்படி பேச்சிப்பாறை பெரியார் சமத்துவ புரத்தில் பெரியார் சிலையினை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அமைத்துள்ளனர். இது குமரிமாவட்ட திராவிடர்கழகத்தின் நீண்ட கால தொடர் முயற்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
No comments:
Post a Comment