டிஜிட்டல் ரூபாய் அறிமுகமாகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

டிஜிட்டல் ரூபாய் அறிமுகமாகிறது

புதுடில்லி, நவ.30 இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில் தற்போது இது குறித்த அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்ய இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சில்லறை பணப் பரிவர்த்தனைக்காக  டிஜிட்டல் ரூபாயை டிசம்பர் 1 முதல் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் இந்த பணத்தை நாடு முழுவதும் பரிவர்த்தனைக்கு  பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், அய்ந்து ரூபாய், பத்து ரூபாய், இருபது ரூபாய், அய்ம்பது ரூபாய், நூறு ரூபாய், அய்நூறு ரூபாய் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் டிஜிட்டல் கரன்சி புழக்கத்துக்கு வர உள்ளன என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment