தமிழ்நாட்டுக் கோயில்கள் சத்திரமா? நீதிபதிகள் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

தமிழ்நாட்டுக் கோயில்கள் சத்திரமா? நீதிபதிகள் கேள்வி

மதுரை, அக். 29- திருப்பதி கோயிலில் விரதம் இருக்க முடியுமா? தமிழ்நாட்டுக் கோயில்கள் என்ன சத்திரமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலாளர் சித்ரங் கநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்செந்தூர் செந் திலாண்டவர் கோயில் கந்த சஷ்டி விழாவில், இந்தாண்டு, கோயில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி சஷ்டி விரதம் இருக்க கோயில் நிர்வாகம் அனு மதிக்கவில்லை. இங்கு காலம் காலமாக நடை பெற்று வரும் பழக்க வழக் கங்களை மாற்றுவதை ஏற்க முடி யாது. கோயில் உள் பிர காரத்தில் பக்தர்கள் தங்க அனுமதி தர உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இம்மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ. சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவு: திருச்செந்தூர் கோயி லின் உள் பிரகாரத்தில் சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் தங்கியிருக்க அனுமதிக்க முடியாது. கோயிலுக்குள் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுத்தது சரியானது. கோயிலின் உள்ளே இருந்தால் மட்டும் அனைத்தும் சரியாகி விடாது. உண்மையான பக்தியுடன் இருக்க வேண்டும். திருப்பதி கோயிலில் இதுபோன்று விரதம் இருக்க முடியுமா? தமிழ்நாட்டுக் கோயில் கள் என்ன சத்திரமா?

திருச்செந்தூர் கோயிலில் பணம் கொடுத் தால் உடனடியாக சுவாமி தரிசனம் செய்ய முடியும். இந்த கோயிலில் நடை பெறுவதுபோல் வேறு எந்த கோயி லிலும் ஊழல் இல்லை. கோயில் பணக்காரர்களுக்கானது இல்லை. கடவுள் அனை வருக்கும் சமமானவர். இதனால் கோயில்களில் கடைப்பிடிக்கப்படும் தேவையற்ற நடைமுறை களை ஒழிக்க வேண்டும்.

தமிழ்நாட்டுக் கோயில் களைக் காப் பாற்ற புதிய வழிமுறை களை வகுக்க வேண்டும். தவறினால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க நேரிடும். திருச்செந்தூர், பழநி முருகன் கோயில் கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமே சுவரம் ராமநாத சுவாமி கோயில் உட்பட தமிழ் நாட்டில் உள்ள அனைத் துக் கோயில்களிலும் திருப்பதி கோயிலில் பின் பற்றப்படும் கட்டுப்பாடு களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டுக் கோயில் களில் உள் பிர காரங்களில் யாகங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது. யாகங்கள் கோயி லுக்கு வெளியேதான் நடத்தப்பட வேண்டும். இதனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் அறநிலையத் துறை கட் டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களி லும் ஒரே மாதிரியான நடைமுறைகள், கட்டுப் பாடுகளைப் பின்பற்ற வேண்டும். திருச்செந்தூர் கோயிலில் பின்பற்றப் படும் நடைமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து அறநிலையத் துறை ஆணையர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நவ.15-க்கு தள்ளி வைக்கப்படுகிறது.

-இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment