'குவைத் செல்லப்பெருமாள்' நினைவிடத்தில் கழகப் பொதுச் செயலாளர் மரியாதை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

'குவைத் செல்லப்பெருமாள்' நினைவிடத்தில் கழகப் பொதுச் செயலாளர் மரியாதை!

மறைந்த 'குவைத்  செல்லப்பெருமாள்' தந்தை பெரியார் நூலகம் அமைத்து பெரியார் கொள்கையை அங்கு வாழும் தமிழர்களிடையே பரப்பியவர். எப்போதும் புத்தகமும் கையுமாக பார்ப்பவர்களிடம் தந்தை பெரியாரின் நூல்களை வழங்குவதை வாடிக்கையாக கொண்டவர். இன்றுவரை எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய போற்றப்படக்கூடிய பெரியார் தொண்டராக திகழ்கிறார். அவர் 14.8.2021 அன்று  குவைத்தில் மறைந்தார். அவரின் உடல் அடக்கமும் அங்கேயே செய்யப்பட்டது. 29.10.2022 அன்று குவைத்தில் உள்ள அவரது நினைவிடம் சென்று தந்தை பெரியார் நூலக பொறுப்பாளர் சித்தார்த்தன், திமுக முன்னோடி ஆலஞ்சியார், திமுக குவைத் மக்கள் தொடர்பு செயலாளர் கரம்பக்குடி ஜாபர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி அன்பரசன் ஆகியோருடன் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன்   மரியாதை செலுத்தினார்.


No comments:

Post a Comment