குஜராத்- நிலைமை மோசம்! மாயாவதி கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

குஜராத்- நிலைமை மோசம்! மாயாவதி கருத்து

லக்னோ, அக்.31 குஜராத்தில் பா.ஜனதா நிலைமை மோசமாக உள்ளதாக மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று (30.10.2022) தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். 

அதில் அவர் கூறியிருப்ப தாவது:- 

குஜராத் சட்டசபை தேர் தலையொட்டி, பொது சிவில் சட்டத்தை ஒரு தேர்தல் பிரச் சினையாக பா.ஜனதா ஆக்கி இருக்கிறது. வேலைவாய்ப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு பதிலாக, சர்ச்சைக்குரிய, பிரித்தாளும் பிரச்சினைகளை தேர்தல் பிரச்சினை ஆக்குகிறது. இது, குஜராத்தில் பா.ஜனதா நிலைமை மோசம் என்ற வாதத்துக்கு வலு சேர்க்கிறது. பொது சிவில் சட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கூறிய நிலையில், பா.ஜனதா இப்படி செய்யக் கூடாது. மேலும், குஜராத், இமாசலப்பிரதேசம் சட்டசபை தேர்தல்கள் நடக்கும் நிலையில், ரூ.545 கோடி மதிப்புள்ள நன் கொடை, பெயர் தெரியாதவர் களிடம் இருந்து தேர்தல் பத்தி ரங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த பணம் எங்கே போகிறது? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment