சென்னையில் 15 நாட்களுக்கு பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

சென்னையில் 15 நாட்களுக்கு பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை

 சென்னை,அக்.31- கோவை கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாகத் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. விசாரணையை என்அய்ஏ பிரிவுக்கு மாற்றியுள்ள நிலையில் உளவுப் பிரிவு காவல்துறையினரும் ரகசிய கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க ஒவ்வொரு மாவட்ட காவல்துறையினரும் தங்கள் மாவட்டங்களுக்குத் தகுந்தவாறு பாதுகாப்பு வியூகங்களை வகுத்துள்ளனர். அதன்படி, சென்னையிலும் பாதுகாப்பு, கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று (31.10.2022) பிறப்பித்த உத்தரவில், "சென்னையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு 30.10.2022 முதல்அடுத்த மாதம் 14ஆம் தேதி இரவு 11 மணி வரை அமலில் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment