வெம்பக்கோட்டை அகழாய்வில் டெரகோட்டா மனித முகம் - பறவை தலை கண்டெடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

வெம்பக்கோட்டை அகழாய்வில் டெரகோட்டா மனித முகம் - பறவை தலை கண்டெடுப்பு

சிவகாசி,செப்.30- விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை அருகே, தொல்லியல் மேட்டில் ஏற்கெனவே 10 குழிகள் தோண்டப்பட்டு, நடந்த அகழாய்வில் டெரகோட்டா எனப்படும் சுடுமண்ணாலான குவளை உள்ளிட்ட பல வகையான கலைப்பொருட்கள் கண் டெடுக்கப்பட்டன. தற்போது சுடுமண்ணாலான பறவை தலை, மனித முகம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ‘‘இங்கு கிடைத்த பழங்கால பொருட்கள் அனைத்தும் தொல்லியல் துறையின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவில் வெம்பக்கோட்டை பகுதியில், எந்த நூற்றாண்டை சேர்ந்த மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பது குறித்த  தகவல்கள் தெரிய வரும்’’ என்றார்.


No comments:

Post a Comment