மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஆக.31 மேற்கு வங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பார்த்தா சட்டர்ஜி, அனுப்ரதா மோண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கொல்கத்தாவில் 29.8.2022 அன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா, ‘‘பாஜ அனைவரையும் திருடர்கள் என்று முத்திரை குத்துகிறது. திரிணாமுலில் உள்ளவர்கள் அனைவரும் திருடர்கள் போலவும் பாஜவும் அதன் தலைவர்களும் நல்லவர்கள் போலவும் பிரச்சாரம் செய்கின்றனர். நான் மட்டும் அரசியலில் இல்லாதிருந்தால் அவர்களின் நாக்கை அறுத்திருப்பேன்.
இந்தியா முழுவதும் காவி கட்சி அல்லாத மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை அகற்ற பாஜ, தவறாக சம்பாதித்த பணத்துடன் அமலாக்கத் துறை மற்றும் சிபிஅய் போன்ற அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. தேர்ந் தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அகற்ற பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான கோடிகள் எங்கிருந்து கிடைக்கின்றன என பாஜ பதில் அளிக்க வேண்டும். ஏனெனில் அந்த கட்சி, ஹவாலா மூலம் வெளிநாடுகளில் பணத்தைக் குவித்து வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற் கடிப்போம்’’ என்றார்.
முன்னேறிய ஜாதியாருக்கு இடஒதுக்கீடா?
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
புதுடில்லி,ஆக.31- பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்தும், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள சமூக, கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. இந்த இரு விவகாரங்கள் தொடர்புடைய எழுத்துப்பூர்வமான பொதுவான வாதங்களை தாக்கல் செய்வதற்காக ஒருங்கிணைப்பு வழக்குரைஞர்களை நியமித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை அடுத்த கட்டத்துக்கு எப்படி கொண்டுசெல்வது என்பது குறித்து முடிவு செய்வதற்காக செப்டம்பர் 6-ஆம் தேதிக்கு மீண்டும் மனுக்களை பட்டியலிட உத்தரவிட்டது. மேலும் இந்த மனுக்கள் மீதான விசாரணை செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்தது.
No comments:
Post a Comment