நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்! மாநிலங்களவையில் பி.வில்சன் சிறப்புத் தீர்மானம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 7, 2022

நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்! மாநிலங்களவையில் பி.வில்சன் சிறப்புத் தீர்மானம்!

புதுடில்லி, ஆக. 7- “நாடு முழுவ திலுமுள்ள சுங்கச்சாவடி களை அகற்ற வேண்டும்” என்று மாநிலங்களவை யில் திமுக உறுப்பினர் பி. வில்சன் வலியுறுத்தினார். 

இதுகுறித்து அவர் பேசியதாவது:

 நாடு முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்­பட்ட சுங்கச்சாவடிகளும், அதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 48 சுங்கச் சாவடிகளும் உள்ளன. சுதந்திரமாக பயணம் செய்வது என்­பது அடிப் படை உரிமை. வளர்ந்த நாடுகளில் சுங்கச் சாலை கள் மற்றும் சுங்கக் கட்ட ணம் அல்லாத சாலைகள் போன்றவற்றைத்  தேர் தெடுப்பதற்கான வாய்ப்பு கள் உள்ளது.

நமது நாட்டில் மாநி லங்களின் முக்கிய சாலை கள் அனைத்தும் இந்திய  தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் எடுக்கப் பட்டு சுங்கக் கட்டணச் சாலைகளாக மாற்றப் பட்டு மக்கள் வலுக்கட் டாயமாக சுங்கக் கட்ட ணம் செலுத்தும் நிலைக்கு ஆளா க்கப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அன்றாடம் சாலைக ளைப் பயன்படுத்த வேண் டியுள்ள நிலையில், மாதாந் திர அனுமதி அட்டைக ளுக்கான கட்டணங்க ளும் அதிகமாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைக ளின் முதலீடுகளை முழு தும் திரும்பப் பெற்ற தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் முழுக்க இயக்கப்பட்ட பல பகு திகள் இன்னமும் அதிகக் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். 

அதேபோல சுங்கக் கட்டணங்கள் ஆண்டு தோறும் தேசிய நெடுஞ்சாலை கண்மூடித்தன மாக உயர்த்தப்படுகிறது. அரசு போக்குவரத்து நிறுவனப் பேருந்துகள் மற்றும் மற்ற இதர அர சின் வாகனங்களிடமி ருந்தும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநில அரசின் போக்குவ ரத்து கழகங்கள் லாபம் ஈட்டாமல் பெயரளவி லான கட்டணங்களி லேயே இயக்கப்படுகிறது. ஆகையால் நாடு முழுவ திலும் உள்ள அனைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத் தின் சுங்க கட்டணசாவடி களிலும் உடனடியாக ஒரு தன்னாட்சி அமைப் பினைக் கொண்டு, தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தா ரர்களின் முதலீடுகள், சுங்க வரி மூலம் வசூல் செய்யப்பட்ட தொகை மற்றும் ஒப்பந்ததாரர் களின் / இந்திய தேசிய ஆணையத்தின் பாக்கி தொகைகள் போன்ற வற்றை தணிக்கை செய்து பகுப்பாய்வு செய்ய வேண் டும். பாக்கி இருந்தால் அவர்களின் பாக்கித் தொகையினைத் தீர்த்து விட வேண்டும். ஏனெ னில், பொதுப்பயன் பாட்டு உட்கட்டமைப் பில் லாபம் ஈட்டும் நோக் கம் இருக்கக் கூடாது. அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்று வதற்கான நேரம் வந்து விட்டது. அதற்கு பதிலாக வாகனங்களை பதிவு செய்யும் பொழுது ஒரு முறை சிறிய கட் டணமாக வசூலிக்கப்பட லாம். எனவே , நாடு முழு வதிலும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டுமாய் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரை கேட் டுக்கொள்கிறேன்! 

இவ்வாறு மாநிலங் களவை உறுப்பினர் வழக்குரைஞர் பி.வில்சன் சிறப்புத்தீர்மானத்தில் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment