நெஞ்சை நெகிழ்விக்கும் ஆரியூரும் - அலமேலுபுரமும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

நெஞ்சை நெகிழ்விக்கும் ஆரியூரும் - அலமேலுபுரமும்!

கலி.பூங்குன்றன்


நினைத்தால் நெஞ்சமெல்லாம் சிலிர்க்கிறது. உடல் அணுக்கள் எல்லாம் குத்திடுகின்றன. நன்றி உணர்ச்சி மக்களிடம் வற்றிப் போய்விடவில்லை என்பதை எண்ணும்போது நம் கண்களில் நீர்க் கசிகிறது.

மிட்டா மிராசுதாரர்கள் அல்ல - ஜமீன்களும் அல்ல - கூடக் கோபுரங்களில் வசிப்பவர்களும் அல்லர்.

இன்னும் கூரைக் குடிசைகள் - மழைக் காலங்கள் அந்தப் பகுதியைப் பார்க்கும் மனிதநேயம் உள்ளவர் களின் மனமெல்லாம் ரத்தம் கக்கும்.

மக்கள் தொகையில் ஒரு பகுதியினருக்கே - ஏனிந்த நிலை?

வெறும் பொருளாதாரக் காரணமா? அந்தப் பொருளாதாரக் காரணத்திற்குக் காரணம்தான் என்ன?

நாம் சொன்னால் கருப்புச்சட்டைக்காரர்களின் கண்ணோட்டமே இப்படித்தான் இருக்கும் என்று கண்மூடித்தனமாகவே சொல்லுவார்கள்!

பிரபலப் பொருளாதார பேராசிரியர் ஆர்தர் லூயிஸ் கூறும் காரணம் என்ன?

‘‘இந்தச் சமூகம் பொருளாதார தேக்கமடைந்ததற்கு மனித இனம் பல ஜாதிப் பெட்டிகளுள் (The Watertight Compartments of Castes) அடைக்கப்பட்டு, தொழி லாளர் புழக்கம் (Mobility of Labour) தடைப்பட்டது ஒன்றே முக்கிய காரணம்'' என்றார் பொருளாதார மேதை ஆர்தர் லூயிஸ். (A Theory of Economic Development) 

தலையிடிக்கும் குடிசைகளில் மக்கள் வாழ்வதற்கும், தண்ணீரில் தத்தளித்துக் கிடப்பதற்கும், அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் பள்ளிக்கூட வாசலை மிதிப்பதற்கும் மனத்தடங்கலும், வறுமையும் தடையாக நிமிர்ந்து நிற்பதற்கே காரணம் ஜாதி கட்டமைப்பே!

இதன் காரணமாகத்தான் ஜாதியின் வேர்களில் சுயமரியாதை - பகுத்தறிவு புரட்சி அணுகுண்டுகளை வீசினார் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார்.

அம்மக்கள் விடுதலை பெறவேண்டும் என்பதற் காகவே ‘விடுதலை' போன்ற ஏடுகளைத் தொடங்கி நாடெங்கும் புயல் வீச்சாகப் பரவச் செய்தார்.

இன்றைக்கு அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புக்கும், கல்விக் கண்ணொளிக்குமான அடித் தளத்தை ஏற்படுத்தியது இந்தச் சுயமரியாதை இயக்க மல்லவா - திராவிட இயக்கமல்லவா!

மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து ஒடுக்கப் பட்ட மக்கள் கல்விக் கூடங்களை நோக்கிப் பறந்து வந்ததற்கான வழிமுறையைக் காட்டியவர் நீதிக்கட்சியின் தலைவர் வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர் - சென்னை மாநகர மேயராக வந்த கால கட்டத்தில்தானே! (1920).

ஆம், ‘விடுதலை' உணர்ச்சி ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலே மூண்டுவிட்டது. நாம் ஓரளவு நிமிர்ந்ததற்கு அடிப்படைக் காரணம் எந்த இயக்கம்? எந்தத் தலைவர்? எந்த ஏடு? என்பதை மக்கள் நன்றிக் கண்ணீர் மல்க உணர்ந்துவிட்டனர்.

அதனுடைய வீச்சை இதோ இப்பொழுது காண ஆரம்பித்துவிட்டோம்!

நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ‘விடுதலை'யின் ஆசிரியராக 60 ஆண்டுகாலம் பணியாற்றிய வருவதற்காக அவர் கரங்களில் 60 ஆயிரம் சந்தாக்களை அளிப்பது என்று கழகம் முடிவெடுத்தது. அந்தக் களத்தில் நமது கருஞ்சட்டைத் தோழர்கள் இறங்கி, ‘விடுதலை'க்குச் சந்தா திரட்டும் பணியில் ஈடுபடும்போது, மக்களின் நன்றி உணர்ச்சிக் கண்ணீரைக் கண்ணெதிரே கண்டபோது, நமது தோழர்கள் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் வடித்தனர்.

நமது தோழர்கள் சந்திக்காத பகுதிகளிலிருந்தும் தன் னிச்சையாக ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்களே விழுப் புரத்தையடுத்த ஆரியூர் கிராமம் - வீட்டுக்கொரு ‘விடுதலை' சந்தா சேர்த்து, அஞ்சல்மூலம் நமது தலை வருக்கு 113 சந்தாக்களை (தொகை ரூ.ஒரு லட்சத்து 13 ஆயிரம்) அளித்தபோது, நமது தலைவர் மட்டுமல்ல, அந்தச் செய்தியைப் படித்தவர்களும் உணர்ச்சிவயப் பட்டனர்.

‘விடுதலை'யில் அதுபற்றிய கட்டுரை (21.7.2022) வந்தபோது, விழுப்புரம் மாவட்டக் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு சுப்பராயன் அவர்களும், தோழர் களும் நேரில் சென்று, அவர்களைப் பாராட்டவேண்டும் என்று நினைத்தபோது, தெரிவித்தபோது - அப்பகுதி தோழர்கள் ‘‘வேண்டாம், வேண்டாம்; எங்களின் ‘விடு தலை'க்காக, எங்களின் நன்றி உணர்வுக்காகவே ‘விடுதலை'க்குச் சந்தாவை அனுப்பி வைத்தோம். அதற்கு எதற்குப் பாராட்டு?'' என்று அத்தோழர்கள் சொன்னார்களே - அது என்ன சாதாரணமா?

பண்பாட்டின் உச்சிக்கே சென்று, நம் உணர்வுகளின் அணுக்களை உலுக்கிவிட்டார்களே!

அத்தோடு முடியவில்லை அந்த நன்றிக் காவியம் தோழர்களே! நாம் சொல்லப்போகும் ஒரு தகவல், வார்த்தைகளால் வருணிக்க முடியாத அடுத்தகட்ட அருஞ்செயல் - பெரும் பாய்ச்சல்!

அதே ஆரியூரின் பக்கத்திலே ஒரு கிராமம் அலமேலுபுரம் (மாம்பழப்பட்டு சாலை, பவானி தெரு) அந்த ஊரிலிருந்து நேற்று (4.8.2022) காலை 25-க்கும் மேற்பட்ட இருபால் தோழர்கள் - பேராசிரியர் மானமிகு அ.செகதீசன் அவர்களின் மகள் மானமிகு செ.திருமாமணி அவர்களின் ஒருங்கிணைப்பில் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தனர்.

இதே மானமிகு செ.திருமாமணி முயற்சியால்தான் ஆரியூர் கிராமத்திலிருந்து முதல் தவணையாக 113 ‘விடுதலை' சந்தாக்களை அளித்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.

நேற்றும் ஊர்மக்களின் பிரதிநிதிகள் புடைசூழ 134 ‘விடுதலை' சந்தாக்களை நமது தலைவர் ஆசிரியரிடம் அளித்து, ‘அதிர்ச்சியையும்', ஆனந்தபெரு மகிழ்வையும் அளித்தனர்.

இதில் மிகமிக மிக (எத்தனை ‘‘மிக'' என்றும் குறிப்பிடலாம்).

இதுவரை நாம் கேட்டிராதது, கேள்விப்படாதது - பார்த்து அறியாதது.

134 சந்தாக்களை அகம் குளிர ஆசிரியர் அவர்களின் கரங்களில் ஒப்படைத்தவர்கள் யார்? யார்?

1. திருநங்கைகள் 41 பேர்

2. நரிக்குறவர் காலனி 6 பேர்

3. சுயஉதவிக் குழு மகளிர் 17 பேர்

4. இருளர்கள் (பழங்குடியினர்) 8 பேர்

5. பறையடிப்போர் சங்கம் 6 பேர்

6. புரதவண்ணார்கள் 11 பேர்

7. கிராமக் கோவில் பூசாரிகள் 9 பேர்

8. டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் 12 பேர்

9. துப்புரவுப் பணியாளர்கள் 9 பேர்

10. தேநீர்க் கடைக்காரர்கள் 2 பேர்

11. வேடம்பட்டு மாரியம்மன் கோவில் தெரு (காலனி) 10 பேர்

12. அறிஞர் அண்ணா மூட்டைத் தூக்கும் தொழி லாளர் சங்கம்  3 பேர்

ஆகக் கூடுதல் 134 பேர்

இந்தப் பட்டியலைப் பார்க்கும்போது பரவச அலைகள் நம்மைப் பந்தாடவில்லையா?

அடித்தட்டு மக்களாக ஆக்கப்பட்ட மக்கள்தம் நெஞ்சத்தின் ஆணிவேரிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் நன்றி உணர்வின் அலைகளை உணர முடியவில்லையா?

ஒருங்கிணைத்த சகோதரியார் மானமிகு திருமாமணி சொன்ன அந்த ஒரே ஒரு வார்த்தை ஆயிரம் ஆயிரம் பொன் பெறும்.

ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் எங்கள் தெருக்களிலே இன்றுவரை சாமி ஊர்வலங்கள் வருவது கிடையாது! (சாமிக்கும், ஜாதி உணர்வு - இதுதான் அர்த்தமுள்ள ஹிந்துமதம்).

ஆனாலும், இப்பொழுது ‘விடுதலை' வருகிறது... ஆம் எங்களுக்கு ‘விடுதலை' கிடைக்கப் போகிறது என்று அம்மையார் சொன்னபோது, நா தடுமாறியது - குரல் தழுதழுத்தது - நன்றிக் கண்ணீர் தாரையாக வழிந்தது.

ஆம்! இத்தகையவர்கள் நம் இயக்கத்தின் அடை யாளம்தான்! நம் இயக்கம் வெற்றி கொண்ட உயரத்தின் அளவுகோல்!!

கருஞ்சட்டைத் தோழர்களே, நீங்கள் இருந்த இடத்திலிருந்து நீங்கள் இவர்களுக்கு நன்றி வணக்கத்தைச் செலுத்துங்கள்; பணம் இல்லை - மனமே முக்கியம் என்பதை உணர்வீர்!

நம் பகுதிகளில் இந்த நன்றி ஊற்றுகள் பீறிடும் பீடுறும் பணிகளை ஆற்றுவீர்!

ஆரியூரும் - அலமேலுபுரமுமாக நமது ஊர்கள் பரிணமிக்கட்டும் - அவர்களின் குடிசைகள் மாளிகை களாக மாறட்டும் - அந்த வீட்டுப் பிள்ளைகள் அய்.ஏ.எஸ்.களாக, அய்.பி.எஸ்.களாகப் பவனி வரட்டும்!

60 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களை சேர்க்க முடி யுமா? என்ற அச்சம், தயக்கம் நம்மிடம் அண்ட முடியுமா?

ஆரியூரையும், அலமேலுபுரத்தையும் பார்த்த பிறகும் அவற்றிற்கு இடமில்லை - இடம் இல்லவேயில்லை.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - ‘விடுதலை' சந்தா இலக்கை எட்டிடுவீர்!

முக்கிய குறிப்பு: பறையடிப் போர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தலைவர் ஆசிரியர் முன்னிலையில், பறையடித்து மகிழ்ந்தனர். தலைவர் ஆசிரியர் அவர்கள், அவ்விரு ஊர்களுக்கும் நேரில் வருவதாகச் சொன்ன போது, அப்பப்பா, அவர்களுக்குத்தான் எத்துணை மகிழ்ச்சி - ஆரவாரக் கைதட்டல்!

வாழ்க ஆரியூரும், அலமேலுபுரங்களும்!

விழுப்புரம்: ‘விடுதலை' சந்தா அளித்தவர்களின் விவரம்

1. திருநங்கைகள்

திருநங்கைகள், விழுப்புரம் மாவட்டம், பவானி தெரு, அலமேலுபுரம் மாம்பழப்பட்டு ரோடு, விழுப்புரம்-605 602

1. பி.ராதா கா/பெ. வனிதா

2. ஜே.சுவாதி கா/பெ. வனிதா

3. ரோஜா கா/பெ. வனிதா

4. வனிதா கா/பெ. ராதா

5. மணிமலர் கா/பெ.ராதா

6. அனாமிக்கா கா/பெ. மணிமலர்

அய்யன் கோவில்பட்டு, அரவாணிகள் தெரு, புதுநகர், அய்யூர் அகரம் (அஞ்சல்), விழுப்புரம்

7. விமலா கா/பெ. ராதா

8. சிவகாமி கா/பெ. ராதா

9. சிந்து கா/பெ. ராதா

10. சம்பா கா/பெ. ராதா

11. ரூபினி கா/பெ. ராதா

12. வாணி கா/பெ. ராதா

13. விஜி கா/பெ. ராதா

14. நித்யா கா/பெ. ராதா

15. சுமதி கா/பெ. ராதா

16. சிவாணி கா/பெ. ராதா

17. மஞ்சு கா/பெ. ராதா

18. மது கா/பெ. ராதா

19. பிரியங்கா கா/பெ. ராதா

20. கருத்தம்மா கா/பெ. ராதா

21. மானிஷி கா/பெ. ராதா

22. நேகா கா/பெ. ராதா

23. இளமதி கா/பெ. ராதா

24. துளசி கா/பெ. ராதா

25. அனுஷா கா/பெ. ராதா

26. நித்சிறீ கா/பெ. ராதா

27. சந்தியா கா/பெ. ராதா

28. பூரணி கா/பெ. ராதா

29. வெண்ணிலா கா/பெ. ராதா

30. சங்கவி கா/பெ. ராதா

31. தனுஷ்சிறீ கா/பெ. ராதா

32. மாலதி கா/பெ. ராதா

33. தமனா கா/பெ. ராதா

34. ஜூலி கா/பெ. ராதா

35. அய்ஸ்வர்யா கா/பெ. ராதா

ஜானகிபுரம், பிள்ளையார் கோவில் தெரு, கண்டமானடி அஞ்சல், விழுப்புரம்

36. கே.குயிலி, தலைவி

37. ஆர்.சலீமா கா/பெ. குயிலி

38. யுவராணி கா/பெ. சலீமா

39. ரபீனா கா/பெ. குயிலி

40. மேகலா கா/பெ. குயிலி

41. ஜெயமாலினி கா/பெ. குயிலி

2. நரிக்குறவர் ஆசாகுளம், சாலாமேடு, நரிக்குறவர் காலனி, விழுப்புரம்

42. சே.சரத்குமர் த/பெ சேகர்

43. மா.நந்தினி த/பெ மாணிக்கம்

44. ச.சத்யா த/பெ சந்தியா

45. ம.ரோஜா த/பெ மல்லிகா

46. லா.சரத்குமார் த/பெ லாலா

47. பா.மகேண்டா த/பெ பாபு

3. சுய உதவிக்குழு பெண்கள்

48. ஜெகபூரணி க/பெ. கலியமூர்த்தி

49. சந்தியா க/பெ. பாலகுரு

50. புஷ்பா க/பெ. வீரக்கண்ணு

51. சுகன்யா

52. விஜயலட்சுமி க/பெ. கோவிந்தராஜ்

53. சுமதி க/பெ. பழனி

54. இந்திரா க/பெ. நாகமணி

55. மேகலா க/பெ. முருகையன்

56. ஏகவள்ளி க/பெ. முத்துக்குமரன்

57. இந்துமதி க/பெ. சத்யராஜ்

58. வள்ளி க/பெ. ராஜா

59. செல்வி க/பெ. குபேந்திரன்

60. இளவரசி க/பெ. சுப்ரபாதம்

61. ராதா க/பெ. சக்திவேல்

62. பட்டுரோஜா க/பெ. ரவி

63. அஞ்சலை க/பெ. வீரக்கண்ணு

64. அங்கையற்கண்ணி க/பெ. தனபால்

4. இருளர்கள் (பழங்குடியினர்)

வெங்கந்தூர் கிராமம், இருளர் கன்னிமார் கோவில் தெரு, விழுப்புரம் மாவட்டம்

65. ப.பத்மநாபன் த/பெ. பழனிவேல்

66. ப.கோமளா த/பெ. பழனிவேல்

67. க.தேவதர்சினி த/பெ. கணேசன்

68. த.ரேவதி த/பெ. தணிகாசலம்

69. க.குணால் த/பெ. கணேசன்

70. த.லாவண்யா த/பெ. தணிகாசலம்

71. பெ.தனுஷ் த/பெ. பெருமாள்

72 ந.மோகனபிரசாத் த/பெ. நடராஜ்

5. பறை இசை சங்கம்

73. கோவிந்தசாமி த/பெ.  முத்துக்கிருஷ்ணன்

74. தமிழன் த/பெ. முருகன்

75. பிரகாஷ் த/பெ. குணசேகர்

76. அஜய் த/பெ. அஞ்சாமணி

77. முனியன் த/பெ. ஆறுமுகம்

78. முனியப்பன் த/பெ. முத்து

6. புரத வண்ணார்

79. ராம்குமார் த/பெ. ராமன்

80. ஆர்.ராஜேஷ் த/பெ. ராமன்

81. விக்னேஷ் த/பெ. குப்புசாமி

82. எல்.பிரியதர்ஷினி த/பெ. லட்சுமணன்

83. கலைச்செல்வி த/பெ. அழகுநாதன்

84. ஷர்மிளா த/பெ. முருகவேல்

85. சக்தி த/பெ. முருகவேல்

86. ஜி.பவித்ரா த/பெ. கோவிந்தன்

87. ஏ.மகேந்திரன் த/பெ. அப்பாதுரை

88. கார்த்திக் த/பெ. அழகுநாதன்

89. கண்மணி த/பெ. ராமன்

7. கிராம கோவில் பூசாரிகள்

90. ராமன் த/பெ. முத்துக்கண்ணு

91. டி.ஜெயக்குமார் த/பெ. தங்கராஜ்

92. ஆரவல்லி க/பெ. அழகுநாதன்

93. ராஜன் த/பெ. பூபாலன்

94. அழகு த/பெ. பூமிநாதன்

95. ஆவின் வாசுதேவன் த/பெ. கிட்டு

96. கலியம்மாள் த/பெ. ராமச்சந்திரன்

97. சடாச்சலம் த/பெ. தனக்கோட்டி

98. செல்வராஜ் த/பெ. சந்தியான்

8. டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம்

99. வீரப்பன் த/பெ. மாயவன்

100. ரகு த/பெ. மாயவன்

101. பாபு த/பெ. பன்னீர்செல்வம்

102. சிலம்பரசன் த/பெ. திருவேங்கடம்

103. ஆனந்தன் த/பெ. ஆறுமுகம்

104. மதுரையன் த/பெ. பாவாடை

105. சிறீதர் த/பெ. பாஸ்கர்

106. ஜெய்கணேஷ் த/பெ. நாகப்பன்

107. குபேந்திரன் த/பெ. கண்ணன்

108. வீராசாமி த/பெ. மாயவன்

109. சாந்தி க/பெ. நாகப்பன் (லேட்)

110. விநாயகம் த/பெ. பாவாடை

9. துப்புரவு பணியாளர்

111. அ.அருள்செல்வன் த/பெ. அய்யப்பன்

112. சி.விஜய் த/பெ. சிவக்குமார்

113. ரா.சத்யபிரகாஷ் த/பெ. ராஜா

114. சு.முத்தழகன் த/பெ. சுரேஷ்

115. ம.சஞ்சய் த/பெ. மகாலிங்கம்

116. த.முத்தமிழ் த/பெ. தர்மலிங்கம்

117. சதீஷ்குமார் த/பெ. ராமன்

118. அ.தனுஷ் த/பெ. அனந்தவேல்

119. அ.அலெக்ஸ் த/பெ. அய்யனார்

10. தேனீர் கடைகள்

120. செல்வராஜ் த/பெ. பச்சையப்பன்

121. வள்ளியம்மை தேநீர் கடை

11. அறிஞர் அண்ணா மூட்டை தூக்கும் தொழிலாளர் சங்கம்

122. கோவிந்தராஜ் த/பெ. பழனி

123. மதிவாணன் த/பெ. உமாகாந்தி

124. புஷ்பராஜ் த/பெ. அண்ணாமலை

12. வேடம்பட்டு கிராமம் காலனி தெரு, ஆதிதிராவிடர் மாரியம்மன் கோவில் தெரு, பெரும்பாக்கம் 

125. ஆனந்தி க/பெ. நாராயணன்

126 சுகந்தி க/பெ.  தேவேந்திரன்

127. சூரியகுமார் த/பெ. பாவாடை

128. கோகுலசாந்தா த/பெ. சேகர்

129. கலியவரதன் த/பெ. மாணிக்கம்

130. ஹேமபதி த/பெ. தனசேகரன்

131. சரோஜினி த/பெ. கேசவன்

132. தேவராஜ் த/பெ. கதிர்வேல்

133. முரளி த/பெ. ராமன்

134. பெரியநாயகி க/பெ. சாரங்கபாணி

No comments:

Post a Comment