கடவுள்களின் சக்தியோ சக்தி! 'கடவுளர்' சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

கடவுள்களின் சக்தியோ சக்தி! 'கடவுளர்' சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

சென்னை,ஆக.31- தமிழ்நாட் டிலிருந்து கடவுளர் சிலை கள் கடத்தப்படுவதை தடுக்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், கோவில்களில் இருந்து காணாமல் போன கடவுளர் சிலைகளை கண்டறிந்து அவற்றை மீட்கும் பணியிலும் தீவி ரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழ் நாட்டு கோவில்களிலிருந்து காணாமல் போன கடவு ளர் சிலை களில் 2 சிலை கள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. மேற்கு கொலராடோ மாகாணத் தில் உள்ள பசடேனா பகு தியில் அமைந்திருக்கும் சைமன் நார்டன் அருங் காட்சியகத்தில் தமிழ் நாட்டு கோவில் விநாயகர் சிலை இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழ்நாட்டிலிருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தேவி சிலை ஒன்று, நியூயார்க் நகரில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிலை களையும் மீட்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஈடு பட்டுள்ளனர்.

அதன் ஒருபகுதியாக சிலைக்கான ஆவணங் களை தயாரித்து, அதனை அமெரிக்க அருங்காட் சியகங்களில் சமர்ப்பித்து சிலைகளை மீட்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment