ஜெனீவா, ஆக.31 உலகின் 3 ஆவது பெரும் பணக்காரர் ஆனார் கவுதம் அதானி.
ப்ளூம்பெர்க் பில்லினர் பட்டியல் வெளியானது. அதில் இந்தியாவின் கவுதம் அதானி மூன்றாம் இடத்தில் உள்ளார். இதன்மூலம் இப்பட்டியலில் முதல் 3 இடங்களில் இடம்பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமையையும் அதானி பெற் றுள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ஸ்பேக்ஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், 2 ஆவது இடத்தில் அமேசானின் ஜெஃப் பெசோஸ் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் ,137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அதானி பிரான்ஸ் நாட்டின் லூயி வுய்ட்டன் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இதுவரை ஆசியப் பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி, ஜாக் மா கூட இடம் பிடித்த தில்லை.
No comments:
Post a Comment