ஒற்றைப் பத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 17, 2022

ஒற்றைப் பத்தி

அமைச்சர் பொன்முடி

ஹிந்தி பேசத் தெரிந்த வர்கள் தமிழ்நாட்டில் 'பானி பூரிதான்' விற்கின்றனர் என்று தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறிவிட்டாராம். அதற்கு எதிர்ப்பாக உ.பி.யிலிருந்து ஒரு குரல் கிளம்பியிருக் கிறது. அவர் உ.பி. மாநிலத் தின் மேனாள் துணை முதல மைச்சராம் - அவர் பெயர் தினேஷ் சர்மா.

அவர் அமைச்சர் பொன்முடி அவர்களுக்குப் பதில் கூறுவதாக நினைத் துக் கொண்டு, ஏதோ சொல்லியிருக்கிறார். இது குறுகிய புத்தியாம் - மொழிபற்றிய அறிவு அவருக்கு இல்லையாம் - அதனால்தான் அமைச்சர் பொன்முடி அப்படி பேசி இருக்கிறாராம்.

அவர் இல்லாததையா பேசிவிட்டார்? தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் ஹிந்தி மொழியைத் தாய் மொழியாகக் கொண் டவர்கள் பானி பூரி விற்றுக் கொண்டுதான் திரிகின்றனர். உணவு விடுதிகளில் 'பெஞ்சு' துடைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நாள்தோறும் ஹிந்தி யைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் நாட்டை நோக்கி வந்து கொண்டுதான் உள்ளனர். சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்குச் சென்று பார்த்தால் வட இந்தியாவிலிருந்து வரும் இரயில்களில் இருந்து ஹிந்தி பேசுபவர்கள் சாரை சாரையாக வந்து கொண்டுதான் இருக்கிறார் கள்.

ஹிந்தி தெரிந்தவர் களுக்கு வேலை கிடைக் கும் என்றால், ஹிந்தி மாநிலங்களிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து ஏன் குவிந்து கொண்டுள்ளனர்?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லட்டும் உபி. மேனாள் துணை முதல மைச்சர்.

அமைச்சர் பொன்முடி யைப்பற்றிப் பேச இவருக்கு என்ன தெரியும்?

கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் பொன்முடி அவர்கள்.

''The Dravidian Move ment And Black Movement'' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் (பிஎச்.டி.) பெற்றவர்.

ஹிந்தி மொழியில் துளசிதாசர் இராமாயணத் தைத் தவிர சொல்லிக் கொள்வதற்கு என்ன இருக் கிறது? என்ன சொல்கிறது துளசிதாசர் இராமாயணம்?

1. பிராமணர் பாதங்களில் பக்தியை வைப்பதுதான் மோட்சம் அடைவதற்குரிய எளிய வழியாகும். 2. பிராமணன் சாபம் கொடுத் தாலும், கொலை செய்தாலும், கொடிய சொற்களைப் பேசினாலும் அந்தப் பிரா மணன் வழிபடத் தக்கவனே! 3. பிராமணன் பாதங்களை வணங்கினால் கடவுள் மகிழ்ச்சி அடைவார். 4. பிராமணனைத் திட்டு கிறவர்கள் நரகங்களில் வாழ்ந்து காகமாகப் பிறப்பார்கள்.

- இதுதான் துளசிதாசரின் இராமாயணம்.

இந்த ஹிந்தியைத்தான் நாங்கள் படிக்கவேண்டுமா? இவற்றை எல்லாம் முழுக்க அறிந்தவர் அமைச்சர் பொன்முடி என்பது நினை விருக்கட்டும்!

மயிலாடன்


No comments:

Post a Comment