பச்சைப் பொய்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 27, 2022

பச்சைப் பொய்!

கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்புக் காரணமாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுகாதார இணை அமைச்சர் பாரதி பர்வீண் பவார் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

அது உண்மையான தகவலா? சாமியார் ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு உள்நோயாளிகள் பிரிவில் ஆக்சிஜன் தீர்ந்து போனதால் 10.8.2017 அன்று 63 குழந்தைகள் மரணம் அடையவில்லையா?

அந்தஅதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அதே ஆண்டில் 17, 18 தேதிகளில்  ஆக்சிஜன் பற்றாக்குறையால், 42 குழந்தைகள் பரிதாபகரமாக மரணிக்கவில்லையா? இந்தக் கோரக்பூரில்தான்.

5 முறை மக்களவை உறுப்பினராகவும், 3.3.2017 அன்று முதல் அமைச்சராகவும் பதவி ஏற்றார் என்பது நினைவிருக்கட்டும்; சொந்தத் தொகுதியிலேயே இந்த கொடுமையிலும் கொடுமை!

இந்த பெருங்கொடுமையைத் தோற்கடிக்கும் வகையில் மற்றொரு மாபெரும் கொடுமை! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வக்கிரக் கொடூரம்!

சாமியார் ஆளும் ஹிந்து பனாரஸ் பல்கலைக் கழக மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளுக்கு நைட்ரஜன் ஆக்சைடை மாற்றி வழங்கவில்லையா? அதன் காரணமாக 14 பேர் அநியாயமாக செத்து மடியவில்லையா?

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சரே தவறான தகவலைத் தெரிவிக்கலாமா?

 - மயிலாடன்

No comments:

Post a Comment