21.1.2022
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
தமிழ்நாட்டில் கீழடி, சிவகளை உள்ளிட்ட ஏழு இடங் களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்படும்; முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சமநிலை ஏற் படுத்தவே 27% இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் விரிவான தீர்ப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
அய்ஏஎஸ் கேடர் விதிகளில் மாற்றம் கொண்டுவரக் கூடாது!: பிரதமருக்கு மே.வங்க முதலமைச்சர் மம்தா கடிதம்.
வெறுப்புப் பேச்சை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்.
டில்லி இந்தியா கேட் நுழைவாயிலில் கடந்த அய்ம்பது ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் அமர் ஜவான் ஜோதி நிறுத்தப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றம் செய்தது ஒன்றிய அரசு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அகில இந்திய இடஒதுக்கீட்டில் 27 %இடஒதுக்கீடு வழங்கியது நீதித்துறை மறு ஆய்வுக்குட்பட்ட கொள்கை முடிவாகும். மேலும், போட்டி தேர்வுகளில் சமூக, பொருளாதார நிலையின் மூலம் ஒரு பிரிவினர் மட்டும் பயன் பெறுவது என்பது தவிர்க்கப்பட்டு, வாய்ப்பு, தகுதி ஆகியவை அனைத்து சமூகத்துக்கும் பரவலாக்கப்பட வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு முன் நீதிமன்றத் தின் அனுமதியை பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவு சரியானதே என்பதால், இது தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment