பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பசியால் வாடும் குழந்தைகளுக்கு மதிய சத்துணவுத் திட்டத்தை தொடர வழிவகை செய்ய வேண்டும் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 21, 2022

பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பசியால் வாடும் குழந்தைகளுக்கு மதிய சத்துணவுத் திட்டத்தை தொடர வழிவகை செய்ய வேண்டும் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள்

 சென்னை, ஜன. 21- தமிழ்நாட்டில் கரோனா மூன்றாம்  அலை காரணமாக பள்ளிகள் மூடப் பட்டுள்ள நிலையில், மீண்டும் பசியின் பிடியில் தள்ளப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான பள்ளிக்குழந்தைக ளுக்கு மதிய உணவு அளிக்கும் சத்துணவு திட்டத்தை முழுமையாக தொடர்வதற் கான வழிவகைகளை செயல்படுத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு தமிழ்நாடு - புதுச்சேரி பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.  

இதுதொடர்பாக முதலமைச்சருக் கும், கல்வி அமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் முனைவர் வே.வசந்திதேவி, செயலர் கல்வியாளர் கே.கிருஷ்ண மூர்த்தி ஆகி யோர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: கோவிட்டின் கொடூரத் தாக்குதல் மீண்டும் தொடங்கிவிட்டது. இரண்டு  ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப் பின் திறந்த பள்ளிகள் இரண்டே  மாதங்களில் மீண்டும் மூடப்பட்டு விட்டன. மூன்றாம் அலை தொடங்கி விட்டது என்ற அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, பள்ளி கள் எப்பொழுது திறக்கப்படும் என்ற எந்த உறுதியுமில்லை.  பள்ளிகள் மூடப் பட்டால், குழந்தை கள் இழப்பது கல்வி யும், ஏற்கனவே பெற்றிருந்த கற்றல் திறன்களும் மட்டும் அல்ல; சத்துணவும் ஊட்டச் சத்தும்தான். பள்ளிகள் மூடப் பட்டால் குழந்தைகள் பட்டினிதான். 

பள்ளியில் வழங்கப்படும் சத்து ணவை வேறு வகைகளில் ஈடு செய்ய இயலாது. சென்ற முறை, 2020 மார்ச் மாதம் பள்ளிகள்மூடப்பட்டபோது, முதல் சில மாதங்கள் வேறு மாற்று ஏற்பாடு ஏதும் செய்யப்படவில்லை. அதன் பிறகு, தமிழ்நாடு அரசு குழந்தை களுக்கு உலர் உணவு (dry rations) வாரம் ஒரு முறை வழங்கப்படும் என்று அறிவித்து, நடைமுறைப்படுத்தியது.  பள்ளி யில் அளிக்கப்படும் சூடான மதிய உண வுக்கு, வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் உலர் உணவு ஈடாகாது. பள்ளி யில் கிடைக்கும் உணவில் ஒரு பங்கு தான் மாணவருக்குக் கிடைக்கும். பசித்திருக் கும் குடும்பத்தின் அனைத்து உறுப்பி னர்களுடனும்பங்கிட்டுதான் மாணவர் சாப்பிட முடியும்.   காலை உணவும் அர சுப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை எழுந்துள்ள நிலையில், மதிய உண வுக்கே இன்று ஆபத்து வந்திருக்கிறது.

மாணவர்களுக்கு முட்டை வழங்கப் படும் என்றும், பெற்றோர் கள் பள்ளிக்கு வந்து முட்டைகளைப் பெற்றுக் கொள் ளலாம் என்றும்  தற்போது ஆணை அனுப்பப்பட்டிருக் கிறது.  அத்துடன் மற்றொரு அதிர்ச்சியும் செய்தியாக வந்திருக்கிறது. பள்ளிகள் மட்டுமல்ல; அங்கன்வாடிகளும் மூடப்படுகின்றன; குழந்தைகளுக்கான உலர் உணவு வீடுக ளுக்குச் சென்று வழங்கப்படும்.  மேலே சுட்டிக்காட்டியது போல், உலர் உணவு வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் போது, குடும்பம் முழுதும் அதைப்பகிர்ந் துண்ணும் நிலைதான் ஏற்படும். குழந்தை அரைப்பட்டினியில் கிடக்கும்.  பள்ளிகள் மூடப்பட்டாலும் சத்துணவு அளிக்கப்பட வேண்டும். எக்காரணத் திற்காக மூடப்பட்டாலும் அளிக்கப்பட வேண்டும். இது சமரசத்திற்கு அப் பாற் பட்டதாக, மாநில  அரசின் சட்டத்தின் அல்லது அரசாணையின் வழி உறுதி செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து மிகவும் குறை பாடு உள்ள, நலிந்த ஒரு தலை முறை தான் நம் கண் முன் உருவாகும். 

பள்ளிகளில் சத்துணவு மய்யம் தொடர்ந்து இயங்க வேண்டும். 11.00 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணி வரையில் மாணவர்களை இருபது பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து, பள் ளிக்கு வரவழைத்து, கரோனா விதி முறைகளைப் பின்பற்றி, உணவு வழங்க வேண்டும்.  இப்பொறுப்பு தலைமை ஆசிரியரிடமும், வகுப்பு ஆசிரியரிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும். இவர்கள் பள்ளி மேலாண்மைக் குழுவின் உதவி யுடன் பணியைச் செய்ய வேண்டும்.   கல்வி உரிமைச் சட்டம், 2009,  பள்ளி களின் நிர்வாக, மேற்பார்வைப் பொறுப் புகளில் பள்ளி மேலாண்மைக் குழு விற்குப் பெரும் பங்களித்து இருக்கிறது. சட்டம் வலியுறுத்தும் இக்குழு தமிழ் நாட்டில் வெறும் பேப்பரில் முடங்கிக் கிடக்கிறது. இக்குழுவில் 75  சதவீதம் பெற்றோர்கள், இருவர் உள்ளாட்சி  உறுப்பினர். குழு உறுப்பினரில் பாதிப் பேரும், குழுத் தலைவரும் பெண்கள். இக்குழுக்களை இயங்க விடாமல் தலை மையாசிரியர்கள் செய்திருக்கின்றனர். 

இந்நிலையை மாற்றும் பெரும் முயற்சி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை  ஏற்றபின் தொடங்கி இருக்கிறது. கல்வித் துறையின் மாநிலத் திட்ட இயக்குநரின் ஆழ்ந்த அக்கறையினால் இக்குழுக்கள் புத்தாக்கம் பெற்று வருகின்றன. பெற் றோர்களை, குறிப்பாகப் பெண்களைக் கொண்ட இக்குழுவிற்கு சட்டம் வகுத்திருக் கும் உண்மையான அதிகாரங்களை அளிப் பதற்காகத் திட்டமிட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் இயங்காத இந்நிலையில் மாணவரைப் பள்ளிகளுக்கு சிறு குழுக்களாக அழைத்து வந்து சத்துணவு அளிக்கும் பணியை இக்குழுக்களுக்கு அளிக்கலாம். தங்கள் குழந்தைகள் பட்டினி கிடப்ப தைத் தவிர்க்கும் தவிப்பு அனைத்துப் பெற்றோர்களுக்கும் நிச்சயம் இருக்கும். ஆகவே,  இப்பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கலாம். 

அதேபோல் அங்கன்வாடிகளுக்கும் பத்துப் பத்துக் குழந்தைகளாக அழைத்து வந்து மதிய உணவு அளிக்கும் பொறுப்பு அந்தக் குடியிருப்புகளில் வசிக்கும் பெற் றோர்களுக்கு அளிக்கலாம். அத்துடன், தங்கள் பள்ளிகளிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கும் பள்ளி மாணவர் தங்கள் குடியிருப்புகளில் உள்ள அங்கன்வாடிகளில் மதிய உணவு அருந்திட ஏற்பாடு செய்யலாம். இதில் அரசுக்கு எந்த கூடுதல் செலவினமும் ஏற்படாது. அனைத்துக் குழந்தைகளின் மதிய உணவிற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment