விடுதலை சந்தா திரட்டும் பணி கோவையில்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

விடுதலை சந்தா திரட்டும் பணி கோவையில்...

"நவ 28, மாலை 3 மணி" தமிழர் தலைவர் 89ஆவது பிறந்தநாள் சுயமரியாதை நாளை முன்னிட்டு கழக ஏடுகள் சந்தா திரட்டும் பணி யில் இரண்டாம் நாளாக வட வள்ளி பகுதி திமுக தோழர் பால்குட்டியை மாவட்ட கழக இளைஞரணி தலைவர் திராவிடமணி அவர்களும், பெரியார் புத்தக நிலையம் பொறுப்பாளர் .மு.ராஜா நேரில் சென்று சந்தித்த போது மகிழ்ச்சியோடு ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ-1800, வழங்கி, அதோடு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 200, நன்கொடையையும் வழங்கினார்!

* டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 89ஆம் பிறந்த நாளை முன்னிட்டு கழக ஏடுகள் சந்தா திரட்டும் பணியில் இரண்டாம் நாளாக மாலை 5 மணி அள வில் சரவணம்பட்டி பகுதி நெசவாளர் அணி திமுக பொறுப்பாளர் சவுந்தர ராஜனை, வடக்கு பகுதி செய லாளர் கவி கிருஷ்ணன் மற்றும், மாவட்ட  இளைஞரணி தலைவர் திராவிடமணி, பெரியார் புத்தக நிலையம் பொறுப்பாளர் .மு.ராஜா ஆகியோர் நேரில் சென்று சந்தித்தபோது மகிழ்ச்சியோடு அரை யாண்டு விடுதலை சந்தா வழங்கினார்!


No comments:

Post a Comment