ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற செயலாளர் பக்தவச்சலம் மறைவுக்கு இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 30, 2020

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற செயலாளர் பக்தவச்சலம் மறைவுக்கு இரங்கல்

சென்னை ஒம்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் 55 ஆண்டு கால செயலாளர் பக்தவத்சலம் (வயது 80) இன்று மாரடைப்பால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.


தமிழ்நாடு அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரு பொது அமைப்பில் 55 ஆண்டு காலம் ஆர்வமுடன் பணி என்பது சாதாரணமானதல்ல.


பெரியார் திடலோடு எப்பொழுதும் நெருக்கமாக இருந்த தோழரின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் ஒய்.எம்.சி.ஏ. நிறுவனத்துக்கும், நண்பர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை


30.6.2020


 


தொடர்புக்கு: 99413 57869


No comments:

Post a Comment