சிதம்பரத்தில் நிவாரண உதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 29, 2020

சிதம்பரத்தில் நிவாரண உதவி


புவனகிரி அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் யாழ். திலீபன் முயற்சியில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன் 40 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களும் - நிதியுதவியும் வழங்கினார். புவனகிரியில் ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதைத்தொடர்ந்து, நிவாரண உதவிகளை அரசு வழங்கக்கோரி புவனகிரி வட்டாட்சியரிடம் மாவட்ட கழக இணைச் செயலாளர் யாழ். திலீபன் தலைமையில் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.


No comments:

Post a Comment