லண்டன், ஏப்.29 ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கெண் டுள்ளது என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை பூமிக்கு வராமல் தடுக்கும் இயற்கை அரணாக ஓசோன் படலம் விளங்குகிறது. பூமியை சுற்றிலும் காணப்படும் இந்த ஓசோன் எனப்படும் ஆக்சிஜன் படலமானது (3),சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப் பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளில் இயங்கி வந்த தொழிற் சாலைகள் கால வரையின்றி மூடப் பட்டன. வாகனப் போக்குவரத்து இல்லை. இதனால் பூமி யில் இருந்து வெளியாகும் மாசுக்களின் அளவும் வெகுவாக குறைந்தது.
பூமியில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால் ஓசோன் படலத்தின் துளைகள் குறைந்துள்ளதா என்பது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கடந்த மாதம் ஆராய்ச்சி செய்தனர். ஆனால், பூமியின் வடதுருவ மான ஆர்ட்டிக்கின் மேற்பகுதியில் இருக்கும் ஓசோன் படலத்தில், ஒரு மில்லியன் சதுர கிலோ மீட்டர் அள வில் பெரிய துளை புதிதாக உருவாகியிருந்தது. மேலும், இந்த துளையானது தென் துருவத்தை நோக்கி விரிவடைந் தும் வந்தது. இந்த செய்தியானது உலக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், இந்த துளை தொடர்பாக செயற்கைக்கோள் உதவி யுடன் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஆய்வு மேற்கெண்டனர். அப்போது, அதிசயிக்கும் விதமாக ஓசோனில் ஏற்பட்டிருந்த அந்த ராட் சத துளை தாமாக மூடிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய துளை தாமாக மூடிக் கெண்டதற்கு, பூமியில் இருந்து வெளி யாகும் காற்று மாசுபாடு அளவு குறைந் ததே காரணம் என சுற்றுச்சூழல் ஆர் வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர், ஆனால், இந்தக் கூற்றினை விஞ்ஞானி கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஓசோனில் மிகப்பெரிய துளை ஏற்பட் டதும் அதுதாமாக மூடியதும் போலார் வோர்டெக்ஸ் எனப்படும் வாயு சுழற்சியே காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment